பாகூர் பகுதியில் 7 ஏரிகள் நிரம்பின
பாகூர்: பாகூர் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், 7 தாங்கள் ஏரிகள் நிரம்பி உள்ளது.
புதுச்சேரியில் உள்ள 84 ஏரிகளில், பாகூர் பகுதியில் மட்டும் மூன்று படுகை அணைகள் உள்ளிட்ட 24 ஏரிகள் உள்ளன. தண்ணீரின்றி கிடந்த ஏரிகள், கடந்த சில நாட்களாக பாகூர் பகுதியில் பெய்து வரும் மழையால் வேகமாக நிரம்பி வருகின்றன. அதன்படி, இன்று (அக்.,26) காலை 7.00 மணி நிலவரப்படி, உச்சிமேடு, மணப்பட்டு, அரங்கனுார், சேலியமேடு, கடுவனுார், இளஞ்சந்தை, பனையடிக்குப்பம் ஆகிய 7 தாங்கள் ஏரிகள் முழு கொள்ளவை எட்டி உள்ளது.
பாகூர் சித்தேரி, கீழ்பரிக்கல்பட்டு, மேல்பரிக்கல்பட்டு, ஆராய்ச்சிக்குப்பம், ஆதிங்கப்பட்டு, பின்னாட்சிக்குப்பம் உள்ளிட்ட தாங்கள் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது. புதுச்சேரி மாநிலத்தின் 2வது பெரிய ஏரியான பாகூர் ஏரியின் முழு கொள்ளவான 3.6 மீட்டரில், 1.50 மீட்டர் உயரத்திற்கு நீர் மட்டம் உயர்ந்துள்ளது. மேலும், குருவிநத்தம் சித்தேரி அணைக்கட்டு, கொமந்தான்மேடு தென்பெண்னையாறு படுகை அணையும் வேகமாக நிரம்பி வழிகிறது.
பங்காரு வாய்க்காலில் நீர் வரத்து இருந்து வரும் நிலையில், அடுத்த சில நாட்கள் தொடர் மழை பெய்தால், பாகூர் பகுதியில் உள்ள அனைத்து நீர்நிலைளும் முழு கொள்ளவை எட்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர் மழையின் காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருவதால், பொதுப்பணி துறை நீர்பாசன பிரிவு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும்
-
ஊழல் தடுப்பு உறுதிமொழி ஏற்பு
-
ஜவுளி கடையில் பணம் திருட்டு: பெங்களூரு விரைந்த போலீசார்
-
இந்திய மேலாண்மை மாணவர் மாநாட்டில் சோனா எம்.பி.ஏ., மாணவர்கள் சாதனை
-
விவசாய தொழிலாளர் சங்க மாநில மாநாடு, ஊர்வலம்
-
பத்திர பதிவுத்துறை 'ஸ்டார் 3.0' திட்டத்துக்கு எதிர்ப்பு தமிழ்நாடு பத்திரம் எழுதுவோர் சங்கத்தினர் 'ஸ்டிரைக்'
-
ஏற்காடு மலை பாதையில் இரு வேறு இடங்களில் விழுந்த மரம், பாறை