நட்டாத்தி நாடார் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்

தேனி: தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை, கருத்தரித்தல் மையத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. 32 மருத்துவத்துறையை சேர்ந்த சூப்பர் ஸ்பெஷலிட்டி டாக்டர்கள் உள்பட 52 டாக்டர்கள் கலந்து கொண்டனர். மருத்துவமனை செயலாளர் கமலக் கண்ணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க செயலாளர் சுதாகர் திறந்து வைத்தார். 596 பயனாளிகள் முகாமில் பங்கேற்றனர். நோயாளிகளுக்கு இ.சி.ஜி., எக்ஸ்–ரே, ஸ்கேன், சர்க்கரை, ரத்த அழுத்தம், உடல் வெப்பம், உடல் எடை பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது. மேலும் 10 நாட்களுக்கு மருத்துவர்கள் ஆலோசனை கட்டணமின்றி வழங்கப்படுகிறது. அறுவை சிகிச்சை டாக்டர்கள் உடையப்பன், குமார் ஆனந்த், முத்துக்குமார், ஜெயக்குமார், அசோக்குமார், செல்வ பாண்டியன், நிவாஷ், நிர்மல்குமார் என அனைத்து துறை நிபுணர்கள் பங்கேற்று ஆலோசனை வழங்கினர். மருத்துவமனை மேலாளர் சாந்தி, மக்கள் தொடர்பு மேலாளர் சேக்பரீத் அலுவலர்கள் தீபன், பாலாஜி உள்ளிட்டோர் முகாம் ஏற்பாடுகளை செய்தனர்.

Advertisement