கலை பண்பாட்டுத்துறை கணக்கு அதிகாரிக்கு பணி ஓய்வு பாராட்டு விழா
புதுச்சேரி: கலை பண்பாட்டுத்துறை கணக்கு அதிகாரி கஸ்துாரி ரங்கன் பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.
புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத்துறை கணக்கு அதிகாரியும், பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் துணை இயக்குனருமான கஸ்துாரிரங்கன், அக்டோபர் மாதத்துடன் பணி ஓய்வு பெற்றுவதால் பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.
காமராஜர் சாலை, ஜெயராம் ஹோட்டலில் நடந்த விழாவில், கஸ்துாரிரங்கன், அவரது மனைவி லட்சுமி பிரபா, மகள் சாய் லாவண்யா, மருமகன் கிேஷார் குமார் ஆகியோர் வரவேற்றனர்.
கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் ராஜவேலு, பணி ஓய்வு பெறும் கஸ்துாரிரங்கனுக்கு சால்வை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தார். இதில், சுகாதாரத்துறை இயக்குநர் செவ்வேள், கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் சக்திவேல், பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குநர் சிவராமன், பல்வேறு அரசுத்துறைகளை சார்ந்த அதிகாரிகள், ஊழியர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். பணி ஓய்வு பெறும் கஸ்துாரிரங்கன் நன்றி கூறினார்.
மேலும்
-
நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
-
ஊழல் தடுப்பு உறுதிமொழி ஏற்பு
-
ஜவுளி கடையில் பணம் திருட்டு: பெங்களூரு விரைந்த போலீசார்
-
இந்திய மேலாண்மை மாணவர் மாநாட்டில் சோனா எம்.பி.ஏ., மாணவர்கள் சாதனை
-
விவசாய தொழிலாளர் சங்க மாநில மாநாடு, ஊர்வலம்
-
பத்திர பதிவுத்துறை 'ஸ்டார் 3.0' திட்டத்துக்கு எதிர்ப்பு தமிழ்நாடு பத்திரம் எழுதுவோர் சங்கத்தினர் 'ஸ்டிரைக்'