கொத்தடிமையாக இருந்த 5 சிறுவர்கள் மீட்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் எண்ணேகொள்புதுார் பகுதியை சேர்ந்தவர் பெருமாள், 45. இவரது செங்கல் சூளையில், 14 முதல், 17 வயதுடைய சிறுவர், சிறுமியர் கொத்தடிமைகளாக பணியாற்றி வருவதாக வருவாய்த்துறைக்கு புகார் வந்தது. இதையடுத்து தாசில்தார் ராஜலட்சுமி தலைமையில், வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். அதில், கடந்த ஓராண்டாக சிறுவர், சிறுமியர் கொத்தடிமைகளாக பணியாற்றி வருவது உறுதியானது. இதையடுத்து, 5 பேரையும் மீட்ட அதிகாரிகள், கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., ஷாஜகான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் அனைவரும் சொந்த கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது குறித்து வி.ஏ.ஓ., முனியப்பன், கிருஷ்ணகிரி போலீசில் அளித்த புகார்படி, செங்கல் சூளை உரிமையாளர் பெருமாள் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement