மலைப்பூண்டில் பூச்சி, நோய் மேலாண்மை கருத்தரங்கு

திண்டுக்கல்: கொடைக்கானல் மன்னவனுாரில் மலைப்பூண்டில் ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மேலாண்மை குறித்த கருத்தரங்கு நடந்தது. பெரியகுளம் தோட்டக்கலை கல்லுாரி பேராசிரியர் கல்பனா துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு வேளாண் பல்கலை பயிர் பாதுகாப்பு மைய இயக்குநர் சாந்தி தலைமை வகித்து பூண்டு உற்பத்தியில் பூச்சி, நோய் மேலாண்மை குறித்த தொழில்நுட்ப பிரசுரங்களை வெளியிட்டு பேசினார்.

தோட்டக்கலை அலுவலர் வெற்றிவேல், வனவியல் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் சுந்தரையா, தோட்டக்கலை கல்லுாரி இணை பேராசிரியர்கள் சுகன்யா, விஜய சாமுண்டீஸ்வரி ஆகியோர் தோட்டக்கலைத்துறை நலத்திட்டங்கள், பூண்டு பயிர் முக்கியத்துவம், நோய் கட்டுப்படுத்தும் முறைகள், உயிரிய தொழில்நுட்பம், ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மேலாண்மை குறித்து எடுத்துரைத்தனர்.குறிஞ்சிமலை உழவர் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், விவசாயிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பயிர் பாதுகாப்புத்துறை கண்காணிப்பாளர்கள் சரவணன், தங்கராஜ் உள்ளிட்டோர் செய்தனர்.

Advertisement