இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க மீண்டும் முயற்சி

கம்பம்: இயற்கை வேளாண்மைக்கு மீண்டும் பல்வேறு சலுகைகளை அறிமுகம் செய்து, ஊக்குவிக்க உள்ளதாக வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப உணவு உற்பத்தி - தேவைப்படுகிறது. எனவே வீரிய ஒட்டு ரகங்கள் பயன்படுத்தப்படுகிறது. ரசாயன பூச்சிகொல்லி மருந்துகள், உரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் மண்ணின் வளம் கெட்டுப் போனது. எனவே இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க வேளாண், தோட்டக்கலைத்துறைகள் பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்தன.

கம்பம் பள்ளத்தாக்கில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அறுபதாம் குறுவை என்ற பாரம்பரிய நெல் ரகம் வேளாண் துறையால் அறிமுகம் செய்யப்பட்டது. 50 சதவீத மானியத்தில் விதை நெல் கிலோ ரூ.12.50 க்கு தந்தனர். இருந்தபோதும் விவசாயிகள் விரும்பி வாங்கவில்லை. வேளாண் அதிகாரிகளின் வற்புறுத்தலால் கணிசமான ' விவசாயிகள் சாகுபடி செய்து வீட்டு உபயோகத்திற்கு வைத்து கொண்டனர். ஆனால் பெரும்பாலான விவசாயிகள் வாங்க மறுத்து விட்டனர். எனவே கூடலூரில் உள்ள வேளாண் பண்ணையில் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்யும் திட்டத்தை ரத்து செய்து விட்டனர். தற்போது மீண்டும் பல்வேறு சலுகைகளை அறிவித்து, இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளதாக வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement