அறிக்கை அரசியல் நடத்தும் உதயநிதி: ஸ்டாலினிடம் திமுக சீனியர்கள் குமுறல்
சென்னை: 'அறிக்கை அரசியலை கைவிட்டு, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை களத்துக்கு வர சொல்லுங்கள். இல்லையென்றால் தி.மு.க.,வை வளர்க்க முடியாது,' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலினிடம், அக்கட்சி மூத்த நிர்வாகிகள் கூறியதாக, தகவல் வெளியாகி உள்ளது.
சட்டசபை தேர்தலில், சென்னை கொளத்துார் தொகுதியில், ஸ்டாலின் தோல்வி அடைந்தார். உடல்நிலை காரணமாக, கட்சி சீரமைப்பு பணிக்காக, ஊர் ஊராக, அவரால் செல்ல முடியவில்லை. அந்த பணிகளை, உதயநிதி கவனிக்காமல், வீட்டிலேயே இருக்கிறார்.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில், வெற்றி வாய்ப்பு இருந்தபோதிலும், முதல்வர் விஜய் தெருத்தெருவாக சென்று ஓட்டு கேட்டார். ஆனால், உதயநிதியோ காரை விட்டு இறங்காமல் பிரசாரம் செய்தார்.
கடந்த 3ம் தேதி, இடைத்தேர்தல் பிரசாரத்தை முடித்து, வீட்டுக்குள் சென்றவர், வெளியே வரவில்லை. இது கட்சி மூத்த நிர்வாகிகளிடம், அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அவரை களத்திற்கு அனுப்புமாறு ஸ்டாலினிடம் வலிறுத்தி உள்ளனர்.
தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் சிலர் கூறியதாவது: மின்கட்டணம், விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு என ஏராளமான பிரச்னைகள் உள்ளன. இதற்கு, உதயநிதியிடம் இமிருந்து கேலி, கிண்டலுடன் அறிக்கைகள் மட்டும் வருகின்றன; களத்தில் இறங்க மறுக்கிறார். ஆளுங்கட்சிக்கு எதிராக வெறும் குற்றச்சாட்டை கூறினால் போதுமா; பிரச்னைகளுக்கு எதிராக போராடவிட்டால், மக்கள் எப்படி நம்புவர்.
இது குறித்து கேட்டால், 'விஜய், வீதிக்கு வந்தா ஜெயிச்சாரு. வீட்டில் இருந்து தானே அரசியல் செஞ்சாரு' என, தன்னை விஜயுடன் ஒப்பிடுகிறார். தி.மு.க.,வினர் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு சென்றதை எல்லாம் சுட்டிக்காட்டுவதோடு, 'சட்டசபையில் என்னமா பேசினார் பாத்திங்கல்ல' என உதயநிதியுடன் இருப்போர் கூறுகின்றனர்.
தன்னை போலவே, இளைஞர் அணியையும் உதயநிதி வைத்திருக்கிறார். வெறுமென அறிக்கை, 'எடிட்' செய்யப்பட்ட வீடியோக்களை, சமூக வலைதளங்களில், 'ஷேர்' செய்தால், இளைஞர்களை கவர்ந்து விடலாம் என, தப்புக்கணக்கு போடுகிறார்.
உதயநிதியின் நடவடிக்கை, ஸ்டாலினுக்கும் பிடிக்கவில்லை. உதயநிதி இப்படியே இருந்தால், கட்சியை வளர்க்க முடியாது என, மூத்த நிர்வாகிகளான, முன்னாள் அமைச்சர்கள் சிலர், ஸ்டாலினிடம் நேரடியாக ஆதங்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
எப்ப ஸ்டாலின் 10 ஆயிரம் தான் இருப்பு இருக்குனாரோ அப்பவே கட்சி அழிவை நோக்கி...போகிவிட்டது
கழுதை தேய்ந்து கட்டறும்பனா கதை தான்.
என்னாது. அறிக்கை அரசியல் செய்வது மகன் மட்டுமா. அப்ப
அப்பாரு செய்யறது என்ன அவியலா.
அப்பாவின் முகத்தையும் உதைநிதி முகத்தையும் பார்க்கவே வெறுப்பாயிருக்கிறது. இவ்வளவு ஊழல் செய்து மக கள் வரி பணத்தையை ஆட்டையை போட்ட கட்சி வளரந்தால் என்ன, மண்ணோடு மண்ணாய் போனால் என்ன. மிருப்பவர்கள. எல்லாம் ரௌடிகள் , பம்மாத்து க்கார்ர்கள். ஒழியட்டும் இத்தோடு.
இப்போதைக்கு பரபரப்பு அரசியல் தேவையில்லை என நினைத்திருக்கலாம். திமுக ஓட்டு வங்கி அப்படியே இருப்பது இடைத்தேர்தலில் தெரிந்தது
தைரியத்தை கொடுத்திருக்கலாம். உள்ளாட்சி தேர்தலை ஒட்டி களத்திற்கு வந்தால் போதுமே.
அதுவரை சமூக ஊடகங்களை உபிஸ் பார்த்துக்கொள்வார்கள்.
இனிமே தெருவுக்கு வந்து யாருக்கு லாபம் ?
எல்லா முடிஞ்சு போச்சு
பொய் சொன்ன வாய்க்கு வோட் கிடைக்காது
Udaya is not fit for politics. He doesn't have a mass appeal.
தோல்விக்கு உண்மைக் காரணங்கள் என்ன >> காட்டாட்சி, பொறுப்பற்ற ஊழலையே பிரதானமாகக் கொண்ட நிர்வாகம், கட்சியினரின் அடாவடித்தனம் .... இவைதானே >> ஆக உண்மைக் காரணங்களை யாருமே எங்க பியூட்டிபுல் டோப் பாக மாண்டரிடம் எடுத்துச் சொல்லலை .... சொன்னா கட்சிப்பதவி நிலைக்காது .... இல்லீங்களா >>
அப்படியே இருக்கட்டும். அதுதான் நல்லது. காங்கிரசுக்கு ஒரு ராகுல் போல் திமுகவுக்கு ஒரு உதயநிதி. தோல்வியே இருவரின் ராசியும்.
திமுகவின் வாக்கு சதவிகிதத்தைக் கவனித்தீரா >> கணக்கில் கொண்டீரா >>
பேசாம இன்ப நிதி யை கட்சியின் தலைவர் ஆக்கி விடலாம்.
இன்பநிதிக்கும் விருமாண்டி தான் பரம்பரை கொத்தடிமை. ஹி.... ஹி...மேலும்
-
நவ. 1 முதல் ரூ.1000க்கு மேல் மது வாங்கினால் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை கட்டாயம்; டாஸ்மாக் அறிவிப்பு
-
விஜிலென்ஸ் விழிப்புணர்வு வார விழா என்.எல்.சி.,யில் துவங்கியது
-
நாய்கள் தாக்கி ஆடுகள் பலி: ஐகோர்ட் அதிரடி உத்தரவு
-
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
-
மழை நீர் தேங்கி நெற்பயிர் அழுகல் வயல்களில் இறங்கி விவசாயிகள் போராட்டம்
-
பணிபுரியும் ஆசிரியர்களுக்கு டிச.,20ல் சிறப்பு டெட் தேர்வு