திருவொற்றியூர் வாரிய குடியிருப்பு கட்டுமான பணிகள் இழுபறி மூன்று ஆண்டுகளாக சிரமப்பட்டு வரும் பயனாளிகள்
திருவொற்றியூர்: திருவொற்றியூர், ‘அருவா குளம்’ பகுதியில் இடித்து அகற்றப்பட்ட இடத்தில் 60 கோடி ரூபாயில், மூன்று ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி, இன்னும் முடியாமல் இழுபறியாக இருப்பதால், பயனாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருவொற்றியூர், கிராமத் தெருவில் 1998ல் கட்டப்பட்ட நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் குடியிருப்புகள் மோசமான நிலையில் இருந்தன. ‘அருவா குளம்’ குடியிருப்பு என அழைக்கப்படும் இக்கட்டடங்களில், 336 பயனாளிகள், தங்கள் குடும்பத்தினருடன் வசித்து வந்தனர்.
கடந்த 2021, டிசம்., 27ல் குடியிருப்பு வளாகத்தின் நான்கு மாடி கட்டடமான ‘டி’ பிளாக் முற்றிலுமாக இடிந்து விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்திற்கு முன்னதாகவே, அந்த வீடுகளில் இருந்தோரை, தி.மு.க., பகுதி செயலர் தனியரசு வெளியேற்றியதால், உயிர் சேதம் தவிரிக்கப்பட்டது.
இதையடுத்து இக்குடியிருப்பின் கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டு, அதே இடத்தில் 59.77 கோடி ரூபாய் செலவில் 336 புதிய வீடுகள் கட்ட, 2023, அக்., 5ல் அடிக்கல் நடப்பட்டது.
இப்பணிகளை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மேற்கொண்டு வருகிறது. தரை தளத்தில் கார் ‘பார்க்கிங்’ உடன் சேர்த்து, ஐந்து தளங்களாக குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.
ஒரு வீட்டுக்கு 410 சதுர அடி பரப்பு என, வரவேற்பறை, சமையலறை, குளியலறை, கழிப்பறை, பால்கனி ஆகியவை கட்டப்பட்டு வருகின்றன.
பணி தொடங்கி 18 மாதங்களில் முடித்து, பயனாளிகளு க்கு வீடுகள் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மூன்று ஆண்டுகள் கடந்தும், வீடுகள் ஒப்படைக்கப்படவில்லை.
இதனால், குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்ட குடும்பத்தினர், அப்பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர்.
வாழ்வாதாரத்திற்கே அவர்கள் சிரமப்பட்டு வரும் நிலையில், வீட்டுக்கென தனியாக வாடகை பணத்தை செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.
அதனால், அருவா குளம் குடியிருப்புகள் கட்டுமானத்தை விரைந்து முடித்து, பயனாளிகளிடம் வீடுகளை ஒப்படைக்க வேண்டும் என, அவர்கள் கோ ரிக்கை விடுத்துள்ளனர்.
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரி கூறுகையில், ‘கட்டுமான பணிகள் முழுதும் முடிந்துவிட்டன. குடிநீர், பிளம்பிங், எலக்ட்ரிக்கல், தெரு மின் விளக்கு போன்ற வசதிகள் ஏற்படுத்த வேண்டியுள்ளது. அப்பணிகளை விரைந்து முடித்து, பயனாளிகளுக்கு வீடுகள் ஒப்படைக்கப் படும்’ என்றார்.
மேலும்
-
நகை கடன் உச்சவரம்பு ரூ.40 லட்சமாக உயர்வு
-
காலாவதியான உணவுப் பொருட்கள் பதுக்கல்: பிளிங்கிட் கிடங்கு உரிமம் அதிரடியாக ரத்து
-
அதிகாரிகளால் திட்டங்கள் முடக்கம் என்.ஆர்., இலக்கிய பேரவை புகார்
-
வழப்பறி ஆசாமிக்கு 2 ஆண்டு சிறை
-
புனித பேட்ரிக் பள்ளி மாணவர்கள் மருத்துவ நுழைவுத் தேர்வில் சாதனை
-
சீனா கட்டும் பிரமாண்ட அணையால் இந்தியாவில் வெள்ள அபாயம்: சீன நிபுணர்கள் எச்சரிக்கை