சீனா கட்டும் பிரமாண்ட அணையால் இந்தியாவில் வெள்ள அபாயம்: சீன நிபுணர்கள் எச்சரிக்கை
பீஜிங்: திபெத்தில், சீனா கட்டி வரும் பிரமாண்ட அணையால் நம் நாட்டில் பிரம்மபுத்திரா நதியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ள அபாயம் ஏற்படும் என சீன ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
நம் அண்டை நாடான சீனாவின் தன்னாட்சி பிரதேசமாக திபெத் உள்ளது. அங்கு யர்லுங் தசாங்போ என்ற நதி பாய்கிறது. திபெத்தில் உற்பத்தியாகும் அந்த நதி, நம் நாட்டின் அருணாச்சல பிரதேசத்தில் நுழையும்போது, பிரம்மபுத்திரா என்று அழைக்கப்படுகிறது.
தற்போது அந்த நதியின் குறுக்கே, 1,600 கோடி ரூபாய் செலவில் உலகின் மிகப்பெரிய அணையை சீனா கட்டி வருகிறது. திபெத்தின் தென்கிழக்கில் இந்தியாவுடனான சர்ச்சைக்குரிய எல்லைக்கு அருகில் உள்ள மோடோக் என்ற ஆழமான பள்ளத்தாக்கு பகுதியில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த அணை கட்டப்பட்டால், நதியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ள அபாயம் ஏற்படும் என சீன அறிவியல் அகாடமி மற்றும் யுனான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த, 1325 முதல் 2020ம் ஆண்டு வரையிலான, யர்லுங் தசாங்போ நதியின் நீர்வரத்து வரலாற்றை ஆய்வு செய்து, அவர்கள் இந்த எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதாவது, உலகின் மிகப்பெரிய அணை என்பதால், அதில் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் தேக்கி வைக்கப்படும். அணையில் அபாய அளவைத் தாண்டி நீர் தேங்கி இருக்கும்போது, அதிக மழை பெய்தால் மதகுகள் திடீரென திறக்கப்படலாம். அப்படி ஒரே நேரத்தில் திறந்துவிடப்படும் தண்ணீர், கீழ்நோக்கி உள்ள இந்தியா மற்றும் வங்கதேச பகுதி மக்களை அதிரடியாக தாக்கும்.
உலக சராசரியை விட இரு மடங்கு வேகமாக திபெத் பீடபூமி வெப்பமடைந்து வருவதால் அங்குள்ள பனிப்பாறைகள் வழக்கத்தை விட மிக வேகமாக உருகி, சமீபத்தில் நேபாளத்தில் ஏற்பட்டதைப் போன்ற பெருவெள்ளம் ஏற்படலாம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த அணை கட்டப்படும் இடம் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதி என்பதாலும் அணைக்கு ஆபத்து ஏற்படலாம் என்பது சீன ஆராய்ச்சியாளர்களின் கருத்து.
இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சி ராகுல் சந்தோஷப்படுவார்.
India should be ready for Nepal like disaster.China will be a perennial headache and villan for india from all sides
சார் எனக்கு ஒண்ணு புரிஞ்சாகணும். நம்மூர்ல சாதாரண பாலம் கட்ட ஐநூறு கோடி, பெரியார் அறிவுலகம் கட்ட ஆயிரம் கோடி, சென்னையில் மழை நீர் செல்ல தண்ணிக்குன்னு தனியா வாய்க்கா ரோடுக்கு பத்தாயிரம் கோடின்னு சொல்றாங்க. ஆனா பக்கத்து வூட்டுக்காரன் சைனாக்காரன் உலகின் மிகப்பெரிய அணையையே வெறும் 1600 கோடியில கட்டி முடிக்கிறான் அப்போ அவங்க ஊர் வெலைவாசி எப்படி இருக்கும்?
சீனா எந்த மாதிரியான ஆபத்துக்களை நமது தேசத்தின் மீது திணித்தாலும் அதை எதிர்கொள்ளும் சக்தி நம்மிடம் உள்ளது.
ஜெய் ஹிந்.
சீனா எந்த மாதிரியான ஆபத்துக்களை நமது தேசத்தின் மீது திணித்தாலும், அதை எதிர்கொள்ளும் சக்தி நம்மிடம் உள்ளது ஜெய் ஹிந்.
புரியல .... அவர்கள் நாட்டிற்குள்தானே அவர்கள் அணை கட்டிக்கொள்வார்கள் ?? கட்டப்பட்ட பிரம்மாண்ட அணை உடைந்தால்தானே வெள்ள அபாயம் ??
அணை கட்டப்படாத பொழுது அவர்களுக்கு இடையேயான நதிநீர்ப் பங்கீடு, அணை கட்டாவிட்டால் அவர்களுக்கு ஏற்படும் நதிநீர் இழப்பு .... ஆகிய பல அம்சங்களை உள்ளடக்கியது இந்தப் பிரச்னை ....
CHINA NOT ABLE TO WIN INDIA ARUNACHAL PRADESH THROUGH WAR, PROXY WAR, GURILLA WAR, NOW THEY HAD TAKEN THIS WANTEDLY. BECAUSE IF THEY DO THIS INDIA WILL ALSO TRY TO CONSTRUCT THE SAME AND THEY SEE MAJOR ARUNACHAL PRADESH AGAINST INDIA CONSTRUCTING
இந்த அணைய இப்போதே துறந்தர் மூலம் வெடிக்கச் செய்ய வேண்டும்.
இவனுங்களே அணை கட்டுவானுங்களாம், இவனுங்களே எச்சரிக்கையும் விடுப்பானுங்களாம்..
அணு சக்தி மூலம் வரும் மின்சாரம் போதாது என்று இப்படி அடாவடியாக சீனா புதிய அணை கட்டி வருகிறது.மேலும்
-
முதல்வரை விமர்சித்த புகாரில் தேடப்பட்ட வேலுார் தி.மு.க., கவுன்சிலர் விழுப்புரத்தில் கைது
-
வேளாண் கல்லுாரி மாணவிகள் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்
-
சரண்டரான நக்சல் முக்கிய தலைவனுக்கு சிறையில் திருமணம்; போலீஸ் உயரதிகாரிகள் வாழ்த்து
-
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்
-
15 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனையும் அபாயம்
-
விளையாட்டில் சாதனை மாணவர்களுக்கு பாராட்டு