புனித பேட்ரிக் பள்ளி மாணவர்கள் மருத்துவ நுழைவுத் தேர்வில் சாதனை

புதுச்சேரி: புதுச்சேரி புனித பேட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பயின்று மருத்துவ நுழைவுத் தேர்வில் சாதனை புரிந்த 20 மாணவர்கள், சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வில் பள்ளி அளவில் முதலிடம் பெற்ற 10 வகுப்பு ,பிளஸ் 2 மாணவர்கள் கவுரவிக்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு, பள்ளி தாளாளர் பிரடெரிக் வரவேற்றார். பள்ளி மருத்துவ இயக்குநர் டாக்டர் ஜீட்டா பிரடெரிக், பள்ளி முதல்வர் ஸ்டெல்லா முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக புதுச்சேரி மகாத்மா காந்தி பல் மருத்துவ கல்லுாரி ஆராய்ச்சி இணைத் தலைவர் பாலமுரளி சாதனை படைத்த மாணவர்களை கவுரவித்து வாழ்த்துரை வழங்கினார். ஆசிரியை சந்தியா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். விழாவில் பள்ளியில் சாதனை படைத்த மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Advertisement