வழப்பறி ஆசாமிக்கு 2 ஆண்டு சிறை

கடலுார்: பெண்ணிடம் தாலியில் நகைகறை பறித்து சென்ற வாலிபருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலுார் கோர்ட் தீர்ப்பு வழங்கியது.கடலுார் அடுத்த களையூரைச் சேர்ந்தவர் அருள் மனைவி சித்ரா,49; இவர், கடந்த நவ., 18ம் தேதி ஆடு மேய்த்தபோது, விழுப்புரம் மாவட்டம், வி. அகரத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் ஜெயக்குமார்,22; என்பவர், சித்ரா அணிந்திருந்த 5 கிராம் தங்க நகைகளுடன் கூடிய தாலி கயிற்றை பறித்து தப்பினார்.

அவரை பொதுமக்கள் விரட்டி பிடித்து, துாக்கணாம்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர்.

அதன்பேரில், அவரை கைது செய்த போலீசார், அவர் மீது கடலுார் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீநிதி, இவ்வழக்கில் தொடர்புடைய ஜெயக்குமாருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 5,000 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

Advertisement