அய்யனாரப்பன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

நாமக்கல்:நாமக்கல், கொல்லம்பட்டறை தெருவில் உள்ள அய்யனாரப்பன், மதுரை வீரன், பெரியண்ண சுவாமி, வனத்தாய் அம்மன், சப்த கன்னிமார், கொன்றமுத்து அய்யன், கொல்லிமலை கருப்பு சுவாமி ஆகிய பரிவார தெய்வங்களுக்கு, நேற்று மகா கும்பாபிஷேக விழா நடந்தது.

அதையொட்டி, கடந்த, 15ல் முகூர்த்த கால் நடப்பட்டு, காப்பு கட்டி, முளைப்பாரி போடப்பட்டது. 23ல் மஹா கணபதி ஹோமமும், மோகனுார் காவிரி ஆற்றில் இருந்து திருமஞ்சனம் எடுத்து வரும் நிகழ்ச்சியம் நடந்தது. அன்று மாலை, முதல் கால யாக பூஜை, 24ல், இரண்டாம் கால பூஜை, மாலை, 5:30 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை நடந்தது.
தொடர்ந்து, நேற்று காலை, 6:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, கடம் புறப்பாடும், 9:00 மணிக்கு மஹா கும்பாபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.
விழாவில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம்
செய்தனர்.

Advertisement