'உணவு சந்ததை'யில் சாம்பார், குருமாவுக்கு 'மவுசு' இட்லி, சப்பா த்தியைவிட 'சை டிஷ்' விலை அதிகம்
சென்னை:இட்லி, தோசை, சப்பாத்திபோன்றவை பிரதான உணவுகளாக
இருந்தகாலம் மாறி தற்போது,'சைடிஷ்'களே பிரதானஉணவாக விற்பனைசெய்யும்,புதிய உணவக கலாசாரம்,சென்னையில் வேகமாக
வளர்ந்து வருகிறது.
உணவகம் என்றால்இட்லி, தோசை, சப்பாத்தி,பூரி, பொங்கல் போன்ற உணவுகள்பிரதானமாகஇருக்கும்.அவற்றை வாங்குவோருக்கு,அந்த உணவுக்குதேவையானசட்னி,சாம்பார், குருமா உள்ளிட்டவை
இலவசமாக வழங்கப்படும் . கூடுதலாகதேவைப்படுவோர்,'சைடிஷ்'களை தனியாகவாங்குவர்.
அசைவ பிரியர்கள்சிக்கன்,மட்டன் உணவுகளையும்,சைவ பிரியர்'பனீர்பட்டர் மசாலா, வெஜ்குருமா, தக்காளி தொக்கு'போன்ற, 'சைடிஷ்' உணவுகளை கூடுதல் விலைக்கு வாங்குவர்.ஆனால், இந்த நடைமுறை தற்போது
முற்றிலும் மாறியுள்ளது.
அதாவது, இட்லி, சப்பாத்திபோன்ற பிரதான உணவுகளின் விலை குறைக்கப்பட்டு,அவற் றுடன் சே ர்த்து சா ப்பிடப்படும் சாம்பார், குருமா,பனீர் பட்டர் மசாலா,சென்னா மசா லா உள்ளிட்ட 'சைடிஷ்'களை , பிரதானமாக விற்பனை செய்யும், புது உணவக கலாசாரம் அதிகரித்துள்ளது.
இதனால்,முன்பு உணவகங்களில்'சைடிஷ்'களாகமட்டுமேஇருந்தவை,
தற்போதுவிற்பனையின்பிரதான பொருட்களாகமாறியுள்ளன.பெரு நகரங்களில்,இந்த புது உணவக கலாசாரம்,'டிரெ ண்ட்' ஆகியுள்ளநிலையில்,
வேளச்சேரி,ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, முகப்பேர் உட்பட சென்னையின் முக்கிய பகுதிகளில்,இந்தவகை உணவகங்கள்
அதிகரிக்க தொடங்கியுள்ளன.
இது போன்ற உணவகங்களில் ,பிரதான உணவாக, ஏதேனும் ஒன்று மட்டும்
தா ன் விற்பனைசெய்யப்படுகிறது. அது சப்பாத்தி அல்லது இட்லி போன்றவை, 6 முதல் 10ரூபாய்க்கும், சாம்பார்,குருமா, பனீர் பட்டர்மசாலா உள்ளிட்டவை, 25 முதல் 80 ரூபாய் வரை விற்கப்படுகின்றன.
'ஸ்விகி, சொமாட்டோ'போன்ற இணைய வ ழி உணவுகளை விற்பனை செய்யும், 'ஹோம் கிச்சன்' மற்றும்பெ ரிய உணவகங்களில்மட்டுமே
, நடைமுறையில்இருந்து இந்தகலாசாரம்,தற்போதுசாலையோர மற்றும் நடுத்தரஉணவகங்களிலும், 'டிரெண்டடாகி' உள்ளது.இது உணவு பிரியர்கள் இடையே கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, ராயப்பேட்டையை சேர்ந்த, 'சப்பாத்தி கார்னர்' உணவகஉரிமையாளர்மோனிகா,வேளச்சேரியில்உள்ளஆறு ரூபாய் இட்லி
கடைக்காரர்ஸ்ரீநாதா ஆகியோர் கூறியதாவது:
சென்னையில்கணவன்,மனை வி என, இருவரும் வேலை க்கு செல்லும் குடும்பங்கள் அதிகம் உள்ளன.காலையில்வீட்டில்இட்லி, தோசை உள்ளிட்ட பிரதான உணவுவகைகளை , விரைவாக தயாரித்து விடுகின்றனர்.
ஆனால், அதற்கு தேவையான சாம்பார், தக்காளி தொக்கு போன்ற ' சைடிஷ்' களை தயாரிக்க நேரம் இருப்பதில்லை. இதேபோல் தான் மாலையிலும்.
இதனால்,தற்போது சந்தையில்'சைடிஷ்' களுக்கு தனி தேவை உருவாகி உள்ளது.ஒருவருக்குதேவையானஅளவு, இரண்டுபேர் சாப்பிடும் அளவு என, வா டிக்கையாளர்களின்தேவைக்கு ஏற்ப ,சாம்பார், குருமா, வெஜ்மசாலா குருமா உள்ளிட்டவற்றை பேக்கிங் செய்து விற்பனை செய்கிறோம்.இதற்கு நல்ல வரவேற்புஉள்ளது.இவ்வாறு அவர்கள்கூறினர்
மேலும்
-
நகை கடன் உச்சவரம்பு ரூ.40 லட்சமாக உயர்வு
-
காலாவதியான உணவுப் பொருட்கள் பதுக்கல்: பிளிங்கிட் கிடங்கு உரிமம் அதிரடியாக ரத்து
-
அதிகாரிகளால் திட்டங்கள் முடக்கம் என்.ஆர்., இலக்கிய பேரவை புகார்
-
வழப்பறி ஆசாமிக்கு 2 ஆண்டு சிறை
-
புனித பேட்ரிக் பள்ளி மாணவர்கள் மருத்துவ நுழைவுத் தேர்வில் சாதனை
-
சீனா கட்டும் பிரமாண்ட அணையால் இந்தியாவில் வெள்ள அபாயம்: சீன நிபுணர்கள் எச்சரிக்கை