ஈரோட்டில் நாளை பி.எப்., குறை தீர்க்கும் கூட்டம்

ஈரோடு:ஈரோட்டில் நாளை (27ல்) பி.எப்., குறை தீர்க்கும் கூட்டம் நடக்கிறது.

ஈரோடு மாவட்ட அமலாக்க அதிகாரி ராஜா வெளியிட்டுள்ள அறிக்கை:

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் சார்பில், ஈரோடு ஆர்.என். புதுார் பயணியர் பிராசசிங் இந்தியா நிறுவனத்தில், நிதி ஆப்கே நிகட் 2.0 என்ற பெயரில், மாவட்ட விழிப்புணர்வு மற்றும் குறை தீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது.
வருங்கால வைப்பு நிதி, தொழிலாளர் காப்பீடு தொடர்பான குறைகளை தெரிவிக்க விரும்பும் உறுப்பினர்கள், தொழில் அதிபர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் முந்தைய கூட்டங்களில் மனு அளித்து அவை நிலுவையில் உள்ளவர்கள் அது குறித்த விபரங்கள் மற்றும் ஆவணங்களுடன் நேரடியாக கலந்து கொண்டு பயன் பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement