சோழீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா

ஈரோடு:ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் வரும் பவுர்ணமி தினத்தன்று, சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் விழா நடைபெறுவது வழக்கம். அரிசி சாதத்தை உடல் முழுவதும் பூசிய நிலையில், அன்ன ஈஸ்வரனாக காட்சியளிக்கும் சிவனை வணங்கினால், கோடி சிவலிங்கத்தை தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அதன்படி, ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி கரையோரம் உள்ள சுந்தராம்பிகை உடனமர் சோழீஸ்வரர் கோவிலில், அன்னாபிஷேக விழா நேற்று நடந்தது. கோவில் பிரகாரத்தில் உள்ள வில்வேஸ்வரர், புஷ்பநாயகிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் சோழீஸ்வரருக்கு 100 கிலோவில் அரிசி சாதம் மற்றும் காய்கறிகளால் அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர், காவிரி ஆற்றில் அன்ன விசர்ஜனம் செய்ததை தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், கோட்டை ஈஸ்வரன் கோவில், நட்டாற்றீஸ்வரர் கோவில், மகிமாலீஸ்வரர் கோவில்களில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது.

* பு.புளியம்பட்டி, அண்ணாமலையார் கோவிலில், அண்ணாமலையாருக்கு, 100 கிலோ அரிசியால் சாதம் செய்து, அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக அன்னம் வழங்கப்பட்டது.

* சென்னிமலை டவுன் கிழக்கு ராஜா வீதியில் உள்ள, கைலாசநாதர் கோவிலில் அன்னாபிேஷகம் நடந்தது. கைலாசநாதருக்கு 50 கிலோ அரிசி, 30 கிலோ காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

அதே போல் சென்னிமலை அடுத்துள்ள முருங்கத்தொழுவில் உள்ள, மேற்கு பார்த்த பிரமன் பூஜித்த தலமான பிரமலிங்கேஸ்வரர் கோவிலில் அன்னாபி ேஷகம் நடந்தது. 25 கிலோ அரிசி, 20 கிலோ காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது.
Latest Tamil News

Advertisement