போலீஸ், உளவுத்துறை எச்சரிக்கை எதிரொலி; பசும்பொன் பயணத்தை தவிர்த்த முதல்வர்

14

சென்னை: உளவுத்துறை எச்சரிக்கை காரணமாக, பசும்பொன்னில் நடக்கும் முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு செல்வதை, முதல்வர் விஜய் தவிர்த்ததாக, தகவல் வெளியாகி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் உள்ள, முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அக்.,30ல் குருபூஜை விழா நடக்கிறது. இதில், தமிழக முதல்வர் விஜய் பங்கேற்க திட்டமிட்டிருந்தார். இதற்கான ஏற்பாடுகளை, மாவட்ட நிர்வாகமும் போலீசாரும் செய்து வந்தனர்.

இந்நிலையில், பசும்பொன் செல்லும் முடிவில் இருந்து முதல்வர் விஜய் பின்வாங்கி உள்ளார். அதற்கு உளவுத்துறை எச்சரிக்கையே காரணம் என தகவல் வெளியாகி உள்ளது.




த.வெ.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: முதல்வர் விஜய் செல்லும் இடங்களில் எல்லாம், அதிகளவில் மக்கள் கூடுகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த, போலீசார் சிரமப்படுகின்றனர். பசும்பொன்னில், ஆண்டுதோறும் தேவர் குருபூஜை நிகழ்வில், வழக்கமாக லட்சக்கணக்கில் கூட்டம் கூடும்.

அங்கு முதல்வர் செல்லும்போது, கூட்டம் அதிகமாகி, சிறு அசம்பாவிதம் நடந்தாலும், எதிர்க்கட்சிகள் அதனை பெரிதாக்கி அரசியல் செய்யக்கூடும். எனவே, பசும்பொன் பயணத்தை தவிர்க்குமாறு, உயர் போலீஸ் அதிகாரிகள் கோரியுள்ளனர். உளவுத்துறையும், அதே ஆலோசனையை வழங்கியது. அதை ஏற்று, பசும்பொன் பயணத்தை, முதல்வர் விஜய் தவிர்த்து விட்டார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

@block_B@

தயங்கிய பழனிசாமி; எச்சரித்த அ.தி.மு.க.,வினர்



அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு, 13 கிலோ தங்க கவசத்தை, அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். ஆண்டுதோறும், அ.தி.மு.க., சார்பில் அதை ஒப்படைத்து, திரும்பி வாங்குவது வழக்கம். ஜெயலலிதா மறைந்த பின், அ.தி.மு.க.,வில், தேவர் குருபூஜை மீதான ஈர்ப்பு குறைந்தது. அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியும் முக்கியத்துவம் தரவில்லை.

அ.தி.மு.க.,வில் இருந்து சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம் ஆகியோரின் வெளியேற்றம், வன்னியருக்கான இட ஒதுக்கீடு போன்றவை, முக்குலத்தோர் சமூதாயத்தினர் மத்தியில், பழனிசாமி மீது அதிருப்தியை ஏற்படுத்தியது. தேர்தலிலும், இது எதிரொலித்த நிலையில், இந்தாண்டு குருபூஜையில் பங்கேற்க பழனிசாமி தயங்கினார்.

அவரிடம், உட்கட்சி குழப்பம், கொங்கு மண்டலத்தில் பின்னடைவு போன்ற மோசமான சூழலில், பசும்பொன் செல்வதை தவிர்த்தால், கட்சி மேலும் பலவீனமாகி விடும்; அது தினகரனுக்கு வாய்ப்பை கொடுக்கும்' என, கட்சி சீனியர்கள் எச்சரித்ததை தொடர்ந்து, தேவர் குரு பூஜையில் பங்கேற்பதாக, பழனிசாமி அறிவித்துள்ளார். இவ்வாறு, அவர்கள் கூறினர்.block_B

Advertisement