ஈரோட்டில் ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம்

ஈரோடு:ஈரோட்டில், ஆர்.எஸ்.எஸ்., சார்பில் விஜயதசமி விழா ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.

சூரம்பட்டி வலசு மாரியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து, சீருடை அணி
வகுப்பு ஊர்வலம் துவங்கியது. மாவட்ட செயலாளர் ஈஸ்வர மூர்த்தி தலைமை வகித்தார். பின்னர் பெரியார் நகர் 80 அடி சாலை பகுதியில் பொதுக்கூட்டம் நடந்தது. சீருடை அணிவகுப்பில் சென்ற ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்களுக்கு வழி நெடுகிலும் பொதுமக்கள், பெண்கள் மலர் துாவி வாழ்த்து தெரிவித்தனர்.
கோஷங்கள் ஏதுமின்றி ஊர்வலம் அமைதியான முறையில் நடந்தது. பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். ஆர்.எஸ்.எஸ். கோட்ட இணை தலைவர் குமார், மாவட்ட தலைவர் சந்திரசேகர், நகர தலைவர் விஜயகுமார் ஆகியோர் பங்கேற்றனர். ஊர்வலத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Advertisement