பரபரப்பை கிளப்பிய மாணவி மாயம் பம்பரமாக சுழன்ற மாவட்ட போலீஸ்

அந்தியூர்: கர்நாடக மாநிலம் சென்னப்பட்டினத்தை சேர்ந்-தவர் சுரேஷ், 51; சமையல் மாஸ்டர். அந்தியூரை அடுத்த பருவாச்சியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக பணி செய்கிறார். பள்ளி அருகில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசிக்கிறார். இவரின், 14 வயது மகள், அதே பள்ளியில் ஒன்-பதாம் வகுப்பு படிக்கிறார். வீட்டிலிருந்து, 400 மீட்டர் தொலைவிலுள்ள பள்ளிக்கு நேற்று காலை புறப்பட்ட மாணவி பள்ளிக்கு செல்லவில்லை. பள்ளியில் இருந்து பெற்றோருக்கு தகவல் தெரி-விக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தனர். உடனடி-யாக அந்தியூர் போலீசில் புகார் தெரிவித்தனர். தனியார் பள்ளி மாணவி மாயம் என்று செய்தி பர-வியதால் அந்தியூரில் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு எஸ்.பி., கிரண் ஸ்ருதி உத்தரவின்பேரில் போலீசார் 'அலர்ட்' செய்யப்பட்டனர்.

சத்தியமங்கலம் பஸ் ஸ்டாண்டில் மாலை, 4:00 மணியளவில், கர்நாடக மாநிலம் செல்லும் பஸ்ஸில் அமர்ந்திருந்த மாணவியை, சத்தி போலீசார் பார்த்து மீட்டு, அந்தியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சென்று மாண-வியை அழைத்து வந்தனர். விசாரணையில், வீட்டு வேலை செய்யாததால் தாய் திட்டியதால், கோபமடைந்த மாணவி சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்ததும் தெரிய வந்தது. மாணவிக்கு 'கவுன்சிலிங்' கொடுத்து பெற்றோரிடம் ஒப்ப-டைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

Advertisement