அணைக்கு வரத்து அதிகரித்துள்ளதால் நீர்த்தேக்க பகுதியில் மூழ்கும் பயிர்கள்
புன்செய்புளியம்பட்டி: அணைக்கு வரத்து அதிகரித்துள்ள நிலையில், நீர்த்தேக்க பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் நீரில் மூழ்கி வருகின்றன.
பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தண்ணீர் வற்றும்போது அந்த இடங்களில், அந்-தப்பகுதி விவசாயிகள் வாழை, கத்திரி, அவரை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்வது வழக்கம். சில மாதங்களுக்கு முன் அணை நீர்மட்டம், 50 அடியாக இருந்த சமயத்தில், வாழை மற்றும் கத்-திரி, அவரை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்-திருந்தனர். தற்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் நீர்த்தேக்க பகுதிகளான சித்தன் குட்டை, புதுக்-காடு, ஜே.ஜே.நகர் பகுதிகளில் சாகுபடி செய்யப்-பட்டிருந்த வாழை, கத்திரி, அவரை உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி வருகின்றன.
இதில் கத்திரி மற்றும் அவரை அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், தண்ணீரில் மூழ்கி-யுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்-ளனர். மூன்று மாதங்களுக்கு முன்பு நடவு செய்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்களும் நீரில் மூழ்க தொடங்கியுள்ளன.
மேலும்
-
ஒன்றுக்கும் உதவாத அரசு; அவல நிலையில் தமிழகம்; ஸ்டாலின் குற்றச்சாட்டு
-
தவறு செய்தால் சட்டப்படி உரிய நடவடிக்கை; திமுக மாஜி கைதுக்கு அண்ணாமலை வரவேற்பு
-
தாறுமாறாய் அல்ல; தத்துவத்துடன் ஆடுகிற ஆட்டம் தவெக அரசியல் பாதை; அமைச்சர் அருண்ராஜ்
-
மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்கிறது; அதி தீவிரமானது அர்னாப் புயல்
-
இன்றும் தங்கம் விலை அதிகரிப்பு; 2 நாட்களில் சவரனுக்கு ரூ.520 உயர்வு
-
நாளை மறுநாள் கூடுகிறது தமிழக அமைச்சரவை