அரசு இசைப்பள்ளியில் பணியிடம் 30க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
ஈரோடு: ஈரோடு மாவட்ட அரசு இசைப்பள்ளி மையத்தில் பகுதி நேர நாட்டுப்புற கலைப்பயிற்சி வகுப்புக-ளான சிலம்பாட்டம், கும்மி, கோலாட்டம் (வள்ளி), தப்பாட்டம், நாட்டுப்புற நடனம் பணியிடங்க-ளுக்கு ஒப்பந்த அடிப்படையில், 7,000 ரூபாய் தொகுப்பூதிய ஆசிரியர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கலைஞர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். 50 வயது நிறைவு பெற்ற அல்லது, 25 ஆண்டுகள் சம்மந்தப்பட்ட கலை பயிற்சி பிரிவில் அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வெள்ளி, சனிக்கிழமை மாலை, 4:00 முதல் மாலை, 6:00 மணி வரை பயிற்சி தர வேண்டும். நேர்காணலுக்கு தங்கள் சுய விபரத்துடன் பணி அனுபவத்துக்கான சான்றிதழ் நகல்களை விண்ணப்பித்துடன் அனுப்ப வேண்டும். நேர்காணலில் அசல் சான்று சமர்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை நேரில் அல்லது தபால் மூலம் வரும், 30க்குள், 'தலைமை ஆசி-ரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, பி.பெ.அக்ர-ஹாரம், பவானி சாலை, ஈரோடு-5' என்ற முகவ-ரிக்கு அனுப்ப வேண்டும். கூடுதல் விபரத்தை, 73733-37966, 0424 2294365 ஆகிய எண்களில் அறி-யலாம்.
மேலும்
-
அரசு மருந்தகம் பகுதி திறந்த வெளியில் கழிவுநீர்
-
பொன்னானி ஸ்ரீ மகாவிஷ்ணு கோவிலில் புத்தரி பூஜை: கேரளம் நெல் கதிரை சுமந்து வந்த பழங்குடிகள்
-
4 ஆண்டுக்குப் பிறகு அந்தஸ்தை இழந்தார் ஜடேஜா
-
விக்சித் பாரத் இளைஞர் பார்லி., போட்டியில் பங்கேற்க அழைப்பு
-
குழியை மூடி சமன் செய்தால் வாகனம் நிறுத்தலாம்
-
பூட்டிய வீட்டில் பைப் திருட்டு பொக்காபுரத்தில் இருவர் கைது