ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு; ஈரோடு மாவட்ட அனைத்து ஓய்வு பெற்ற சுகா-தார ஆய்வாளர்கள் கிரேடு-1 கூட்டமைப்பு சார்பில், ஈரோடு, திண்டலில் உள்ள மாவட்ட சுகா-தார துணை இயக்குனர் அலுவலகம் முன், ஒருங்-கிணைப்பாளர் ஓம்சக்தி ஆறுமுகம் தலைமை யில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

'

சேனிட்டரி இன்ஸ்பெக் டர் கோர்ஸ்' முடித்த அனைவருக்கும் கோர்ஸ் முடித்த நாள் முதல் சுகாதார ஆய்வாளர்கள் கிரேடு-1க்கான அனைத்து பணபலன்களையும் வழங்க சென்னை உயர்நீதி-மன்றம் உத்தரவிட்டும், 10 ஆண்டாக உத்தரவை சுகாதாரத்துறை அமலாக்கவில்லை. நீதிமன்-றத்தில் மீண்டும் வழக்கு தொடுத்ததும், 1,211 பேருக்கு அனைத்து பணபலன்களை வழங்க உத்-தரவிட்டது. இதில், 121 பேருக்கு மட்டும் பண பலன்களை வழங்கிவிட்டு மீதி, 1,090 பேருக்கு வழங்கவில்லை. மாவட்ட சுகாதாரத்துறை எங்கள் நிலுவை குறித்த விபரத்தை அனுப்பாமல் காலம் தாழ்த்துவதால் பணபலன் கிடைக்க-வில்லை என்று கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Advertisement