படித்துறையில் துாய்மை பணி களமிறங்கிய தன்னார்வலர்கள்
ஈரோடு:ஈரோடு,
காவிரிக்கரையில் உள்ள படித்துறையில் பக்தர்கள் அமர்ந்து திதி,
தர்ப்பணம் கொடுத்து வழிபாடுகளில் ஈடுபடுவது வழக்கம். பின்னர்
பிண்டம், பூக்கள், மாலை என பூஜைக்கு பயன்படுத்திய பொருட்களை ஆற்றில்
கரைக்கின்றனர்.
இதேபோல் பழைய சுவாமி புகைப்படங்கள், துணி, விளக்கு
போன்றவற்றையும் ஆற்றில் வீசுவதால் படித்துறை முழுவதும் மாசடைந்து
காணப்பட்டது. மேலும் சுகாதார சீர்கேடு நிலவியதால், விசேஷ நாட்களில்
பக்தர்கள் வழிபாடு நடத்துவதில் சிரமம் ஏற்பட்டது.
இந்நிலையில்,
நேற்று பவுர்ணமி தினம் என்பதால் காவிரிக்கரை சோழீஸ்வரர் கோவிலில்
நடந்த அன்னாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்க வந்தனர்.
இதனால் படித்துறைகளை சுத்தம் செய்யும் பணியில், சிறுவர், பெரியவர் என,
15க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது
கரையில் தேங்கியிருந்த துணி, போட்டோ பிரேம்கள், பிளாஸ்டிக் பொருட்கள்,
ஆகாயத் தாமரைகளை அகற்றி சுத்தம் செய்தனர். பின்னர் காவிரி ஆற்றின்
மகிமை, சுத்தமாக பேணி காப்பதன் அவசியம் குறித்து மக்கள் மத்தியில்
விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும்
-
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு யுஏஇ நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
-
ஆந்திராவின் கடலோரப் பகுதிகளுக்கு நாளை காலை வரை ரெட் அலெர்ட்; மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை
-
ஜம்மு காஷ்மீர் அமைச்சரவையில் ஹிந்துக்கள் பிரதிநிதித்துவம் குறைப்பு
-
புயல் காரணமாக சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் 12 விமானங்கள் ரத்து
-
நகராமல் ஒரே இடத்தில் அர்னாப் புயல்; கரையை கடக்க 3 மணி நேரமாகும் என கணிப்பு
-
அர்னாப் புயல் எதிரொலி; ஆந்திரா, ஒடிசாவில் சூறைக்காற்றுடன் கொட்டியது கனமழை