பறவைகள் சரணாலயத்தில் அமைச்சர் ஆய்வு

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் வெள்ளோடு பறவைகள் சரணாலயம், அவல் பூந்துறை ஏரி, நட்டாற்றீஸ்வரர் கோவில் ஆகிய இடங்களில், சுற்றுலா மேம்பாட்டு பணிகளை தமிழக சுற்றுலா துறை அமைச்சர் ராஜேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில், சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பறவைகளை பார்வையிட தேவையான வசதி, சுற்றுலா வழிகாட்டி வசதி குறித்து ஆய்வு செய்தார். அங்கு அமைக்கப்பட்டு வரும் சிறுவர் பூங்காவை பார்வையிட்டு, அலுவலர்களுக்கு தரம் குறித்து அறிவுறுத்தினார்.

அவல் பூந்துறை ஏரியில் படகு துறையை மேம்படுத்துதல், பூங்காவை மேம்படுத்துதல், மக்களுக்கு தேவையான கழிப்பறை வசதிகளை ஏற்படுத்துதல், இரவில் ஏரி பகுதியில் போதிய வெளிச்சத்துடன் காணப்படும் வகையில், மின் விளக்கு வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட சுற்றுலா மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

நட்டாற்றீஸ்வரர் கோவிலில், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்தும், கோவிலை சுற்றி சுற்றுச்சுவர் அமைப்பது குறித்தும் ஆய்வு செய்தார்.

எம்.எல்.ஏ., சண்முகன், மாவட்ட வன அலுவலர் குமிளி வெங்கட அப்பால நாயுடு, துணை ஆணையர் சுகுமார், தாசில்தார் மோகனா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Advertisement