கரூர் அருகே அக்ரஹாரத்தில் தார்ச்சாலை சேதத்தால் அவதி

கரூர்,:கரூர் மாவட்டம், பெரிய ஆண்டாங்கோவில் அக்ரஹாரம் பகுதியில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அப்பகுதியில் போதிய சாக்கடை கழிவுநீர் வாய்க்கால் இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் ஓடிய வண்ணம் உள்ளது.

மேலும், அமராவதி ஆற்றின் கரையோர பகுதிகளில் இருந்து, சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள, போர்வெல் குழாய்களில் இருந்து, தண்ணீர் லாரிகளில் ஏற்றப்பட்டு, அக்ரஹாரம் வழியாக கொண்டு செல்லப்படுகிறது. இதனால், சாலைகள் சேதமடைந்துள்ளன. தற்போது பெய்த மழையால், குண்டும், குழியுமான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சில இடங்களில் மட்டும், சாக்கடை கழிவுநீர் வாய்க்கால் கட்டப்பட்டுள்ளது.

எனவே, பெரிய ஆண்டாங்கோவில் அக்ரஹாரம் பகுதியில் முழுவதுமாக, புதிதாக சாக்கடை கழிவுநீர் வாய்க்கால்களை கட்டி, புதிதாக தார்ச்சாலை அமைக்க ஆண்டாங் கோவில் மேற்கு பஞ்., மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement