கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்
கரூர்:கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், அன்னாபிஷேக விழா நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஆண்டுதோறும்
ஐப்பசி மாதம் பவுர்ணமி நாளில், அனைத்து சிவாலயங்களிலும்,
அன்னாபிஷேக விழா நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று மாலை, கரூர்
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், மூலவர் பசுபதீஸ்வரர், நாகேஸ்வரர்,
கரிய மாலீஸ்வரர் சிலைகளுக்கும், கரூர் உழவர் சந்தை எதிரே, விசாலாட்சி
சமேத வஞ்சுலீஸ்வரர் கோவிலில் மூலவருக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும்
அன்னாபிஷேகம் நடந்தது. பின், பக்தர்களுக்கு அன்னதானம்
வழங்கப்பட்டது.
அதேபோல், திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை
சமேத மாதேஸ்வரன் கோவில், சின்ன சேங்கல் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர்
கோவில், நன்செய் புகழூர் மேகபாலீஸ்வரர் கோவில்களிலும் மூலவருக்கு,
சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, அன்னாபிஷேகம் செய்யப்பட்டது.



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு யுஏஇ நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
-
ஆந்திராவின் கடலோரப் பகுதிகளுக்கு நாளை காலை வரை ரெட் அலெர்ட்; மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை
-
ஜம்மு காஷ்மீர் அமைச்சரவையில் ஹிந்துக்கள் பிரதிநிதித்துவம் குறைப்பு
-
புயல் காரணமாக சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் 12 விமானங்கள் ரத்து
-
நகராமல் ஒரே இடத்தில் அர்னாப் புயல்; கரையை கடக்க 3 மணி நேரமாகும் என கணிப்பு
-
அர்னாப் புயல் எதிரொலி; ஆந்திரா, ஒடிசாவில் சூறைக்காற்றுடன் கொட்டியது கனமழை
Advertisement
Advertisement