ஜவுளி கடையில் பணம் திருட்டு: பெங்களூரு விரைந்த போலீசார்

சேலம்: சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட், டவுன் போலீஸ் ஸ்டேஷன் அருகில் ஜவுளிக்கடை செயல்பட்டு வருகிறது. கடந்த, 5ல், மர்ம நபர்கள் ஜவுளிக்கடையின் மொட்டை மாடி வழியாக வந்து, கல்லா பெட்டியில் இருந்த ரூ.4.25 லட்சத்தை திருடி சென்றனர். இது குறித்து கடை மேலாளர் சிவானந்த முருகன் கொடுத்த புகாரின்படி, டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பெங்களூரு பகுதியில் கொள்ளை வழக்கில், 5 பேர் கொண்ட கும்பல் சிக்கியது. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், சேலம் ஜவுளிக்கடையில் பணம் திருடிய வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்த நபர்கள் குறித்து கர்நாடக போலீசார், சேலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சேலம் போலீசார், பெங்களூரு சென்று அவர்களை பிடித்து வந்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Advertisement