இந்திய மேலாண்மை மாணவர் மாநாட்டில் சோனா எம்.பி.ஏ., மாணவர்கள் சாதனை

சேலம்: சென்னை வள்ளுவர் கோட்ட அரங்கில், 25வது எம்.எல்.ஏ., அகில் இந்திய மேலாண்மை மாணவர் மாநாடு, 'எதிர்காலத்திற்கு தயாரான தலைமைத்துவம், மாறி வரும் உலகிற்கேற்ப மேலாண்மையை மறுவடிவமைத்தல்' என்ற கருப்பொருளில்
நடந்தது.
இதில் தொழில் முனைவோர் மேம்பாடு, செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் நிறுவன மாற்றங்கள், வேலைவாய்ப்பு திறன்கள் மற்றும் தலைமைத்துவ மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் நடந்தன. ஸ்கிராப்பிள் போட்டியில் ஆஷிபா அஞ்சும் முதலிடம், பிரசாந்த் இரண்டாம் இடம், மேவிஸ் மூன்றாம் இடத்தை பிடித்தனர். வணிக வினாடி வினா போட்டியில் அகாஷ் பாபு மற்றும் பாத்ரி ஆகியோர் இரண்டாம் பரிசு, கோகுல்ராஜ் மற்றும் ஜீவப்ரியன் இளங்கோவன் ஆகியோர் மூன்றாம் பரிசு பெற்றனர். போட்டியில் முதல் மூன்று பரிசுகளையும் சோனா கல்லூரி மாணவர்கள் வென்றது குறிப்பிடத்தக்க
சாதனையாகும்.
தேசிய அளவிலான மாநாட்டில் மாணவர்கள் தங்களது பகுப்பாய்வுத்திறன், அறிவாற்றல், உத்திசார் சிந்தனை மற்றும் போட்டித்திறனை வெளிப்படுத்தினர். இத்தகைய நிகழ்வு மூலம் வகுப்பறை கல்வியுடன், தொழில்துறை அனுபவங்களையும் இணைத்து புரிந்து கொள்ளும் வாய்ப்பு மாணவர்களுக்கு கிடைக்கிறது.
மாணவர்களின் கல்வி மற்றும் தொழில் முறை வளர்ச்சிக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வரும், சோனா கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் தியாகு வள்ளியப்பாவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

Advertisement