நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

சேலம்: சேலம் சங்ககிரி பிரதான சாலை, அன்னதானப்பட்டி, வள்ளுவர் நகரில் உள்ள, தமிழ்நாடு மின்சார வாரிய தெற்கு கோட்ட அலுவலகத்தில், நாளை (அக்.,28) காலை 11:00 மணிக்கு மேற்பார்வை பொறியாளர் தலைமையில், நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது.

இதில் தெற்கு கோட்டன் நுகர்வோர், மின் வினியோகம் தொடர்பான குறைகளை நேரில் தெரிவித்து பயன் பெறலாம் என, மின்சார வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement