விவசாய தொழிலாளர் சங்க மாநில மாநாடு, ஊர்வலம்

இடைப்பாடி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில மாநாட்டை ஒட்டி, இடைப்பாடியில் நேற்று ஏராளமானோர் ஊர்வலம் சென்றனர்.
மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து, மா.கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின், 11வது மாநில மாநாடு 3 நாட்கள் இடைப்பாடியில்
உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறுகிறது. முதல் நாளான நேற்று இடைப்பாடி, கேட்டுக்கடை பகுதியில் இருந்து ஊர்வலம் தொடங்கியது. விவசாய தொழிலாளர் சங்க சேலம் மாவட்ட முன்னாள் தலைவர் வெங்கடாசலம் கொடியசைத்து துவக்கி
வைத்தார்.

வெள்ளாண்டிவலசு, காந்தி நகர், அம்மன் நகர், நைனாம்பட்டி வழியாக, 2 கி.மீ., துாரம் சென்று இடைப்பாடி பஸ் ஸ்டாண்டை வந்தடைந்தது. அகில இந்திய தலைவர் விஜயராகவன், அகில இந்திய பொதுச் செயலாளர் வெங்கட், துணை செயலர் கேரள மாநில எம்.பி., சிவராசன், விவசாய தொழிலாளர் சங்க மாநில தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ., சின்னதுரை, விவசாய சங்க மாநில பொதுச்செயலர் அமிர்தலிங்கம், மாநில பொருளாளர் பழனிசாமி மாநில செயலாளர் மாரியப்பன், மத்திய குழு உறுப்பினர் பூங்கோதை, மாநில துணைத் தலைவர் கணபதி, வரவேற்பு குழு தலைவர் ராமமூர்த்தி, விவசாய சங்க மாவட்ட செயலர் சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொதுக்கூட்டமும்
நடைபெற்றது.

Advertisement