திருவாடானை வாரச்சந்தை சேறும் சகதியாக மாறியது

திருவாடானை: திருவாடானை வாரச்சந்தை மழையால் சேறும், சகதியுமாக மாறியது. மக்கள் அவதிப்பட்டனர். திருவாடானையில் வாரந்தோறும் திங்களன்று வாரச்சந்தை கூடுவது வழக்கம். சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விற்கவும், மக்கள் காய்கறிகள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கவும் கூடுவார்கள். இந்நிலையில் இன்று (அக்.,26) வழக்கம் போல் வாரச்சந்தை கூடியது.

அப்போது இன்றும் (அக்.,26), அதற்கு முந்தைய நாள் பெய்த கனமழையால் சந்தை முழுவதும் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறியது. சந்தைக்கு வந்த மக்களும், வியாபாரிகளும் பெரிதும் அவதியடைந்தனர். சகதி நிறைந்த பாதையில் நடந்து செல்ல முடியவில்லை. பெண்கள், முதியவர்கள் சகதியை மிதித்து கொண்டே பொருட்களை வாங்கி சென்றனர்.

மழை நீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுப்பதோடு, தரைதளம் அமைக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தினர்.

Advertisement