பத்திரம் எழுதுவோர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கடலுார்: கடலுாரில் தமிழ்நாடு பத்திரம் மற்றும் நகல் எழுதுவோர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பத்திரப் பதிவு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுந்தர் தலைமை தாங்கினார். கவுரவு தலைவர் விஷ்ணுராம், மாவட்ட செயலாளர் மூர்த்தி, பொருளாளர் சேகர், செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார், துணைத் தலைவர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர்.

பத்திரப் பதிவை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

Advertisement