அரசாணைகள், நியமனங்கள் மூடி மறைப்பு: கேள்விக்குறியாகும் அரசின் வெளிப்படை தன்மை
சென்னை : தமிழக அரசு துறைகள் சார்பாக பிறப்பிக்கப்படும் அரசாணைகளை, முறையாக வெளியிடாமல் மறைப்பதால், வெளிப்படைத்தன்மை கேள்விக் குறியாகி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
'த.வெ.க., ஆட்சி வெளிப்படைத் தன்மையுடன் நடக்கும்' என, முதல்வர் விஜய் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால், அரசு நியமனங்கள், அரசாணைகள் உள்ளிட்ட எதிலும் வெளிப்படை தன்மையே இல்லை என்று கூறப்படுகிறது.
மறைப்பு
இதுகுறித்து, தலைமை செயலக வட்டாரங்கள் கூறியதாவது: தமிழக அரசில் மொத்தம் 42 துறைகளும், நுாற்றுக்கும் அதிகமான இயக்குனரகங்களும் ஆணையரகங்களும் உள்ளன. அரசின் நிர்வாக பணிகள், திட்டங்கள், அறிவிப்புகள் தொடர்பான அரசாணைகளை, துறையின் செயலர்களான ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் வெளியிடுவர். அந்த வகையில், ஒரு நாளைக்கு சராசரியாக, 20 முதல், 30 அரசாணைகள் வெளியாகும். இவற்றை பொதுமக்கள், ஊடகங்கள், அரசு அலுவலர்கள் கவனத்துக்கு கொண்டு செல்ல, செய்தித்துறை வாயிலாக, அரசு இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
ஆனால், கடந்த ஆட்சிகளை போலவே, த.வெ.க., அரசும் அரசாணைகளை திட்டமிட்டு மறைக்கிறது. எதை வெளியிட்டால் அரசுக்கு சிக்கல் வராதோ, விளம்பரம் வருமோ, அவை மட்டுமே செய்தித்துறை வாயிலாக வெளியாகின்றன. குறிப்பாக, சென்னை பட்டினப்பாக்கத்தில், புதிய தலைமை செயலகம் கட்டுவதற்கான அரசாணையை, பொதுத்துறை இன்று வரை வெளியிடவில்லை. அதேபோல, நிறுத்தப்பட்ட, 'லிமிடெட் டெண்டர்' முறையை, மீண்டும் தொடங்குவதற்கான அரசாணையை, நெடுஞ்சாலை துறை வெளியிடவில்லை.
அரசாணைகள் மறைக்கப்படுவது ஒருவகை என்றால், பல நாட்களுக்கு பின் வெளியிடுவது வேறு வகை. உதாரணமாக, மழைநீர் சேமிப்பு தொடர்பாக, கடந்த 16ம் தேதி, ஒரு அரசாணையை, நகராட்சி நிர்வாகத்துறை தயார் செய்தது. ஆனால், அந்த அரசாணை, 19ம் தேதி தான் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. முதல்வர் கவனிக்கும் துறையின் நிலைமையே இப்படித்தான் உள்ளது. அரசாணை விவகாரத்தில் இப்படியென்றால், அரசின் நியமன பதவி களிலும் வெளிப்படைத் தன்மை இல்லை.
ரத்து
முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட ரிக்கி ரத்தன் பண்டித் வெற்றிவேலின் நியமனம், செய்தித்துறை மூலம் வெளியிடப்படாமல், கடந்த, மே 12ம் தேதி கசிய விடப்பட்டது. எதிர்ப்பு கிளம்பியதால், அது ரத்து செய்யப்படுவதாக செய்தித்துறை அறிவிப்பு வெளியிட்டது. இருப்பினும், அதே நாளில் முதல்வரின் தனிச் செயலராக நியமிக்கப்பட்ட ஜெகதீஷின் நியமனம் குறித்த அறிவிப்பு, இன்று வரை வெளியிடப்படவில்லை. அத்துடன், முதல்வரின் ஆலோசகர்களாக ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகியோர் நியமிக்கப்பட்டதற்கான ஆணைகளும் இன்று வரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
முக்கியமான விவகாரங்களில், ஒரு செய்தியை கசிய விட்டு, முதலில் ஆழம் பார்க்கின்றனர். அதற்கு எதிர்ப்பு வரவில்லை என்றால் மட்டுமே, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிறது. எதிர்ப்பு கிளம்பினால், அரசாணை, நியமனங்களை மறைத்து விடுகின்றனர். இதை ஒரு வியூகமாகவே, த.வெ.க., அரசு தொடர்ந்து செய்கிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
கிராம நத்தம் நிலங்களுக்கு சிறப்பு பட்டா வழங்க இருப்பதாக, திரு.செங்கோட்டையன் 18 ஆகஸ்டு அன்று அறிவித்திருந்தார். இன்று வரை அதற்கான அரசாணை வெளியாகாததால், மக்கள் மிகுந்த வருத்தத்திலும், விரைவில் அது வெளியாகாதா என்ற எதிர்பார்ப்பிலும் உள்ளனர். தீபாவளிப் பரிசாக இதை அரசு வழங்குமா?
தீய மற்றும் தூய சக்திகளுக்கு உள்ள வித்தியாசம் என்னவென்று தேடவேண்டிவரும் என நினைக்கிறேன்......
பிஞ்சில் பழுத்த ஆட்சி. சீக்கிரமே நாறிவிடும். பதவியில் தொடர நாட்டையே குட்டிச்சுவர் ஆக்காமல் ஓயமாட்டார்கள்.
தூக்கி எறியப்படுவார்கள்.
நாட்டை முன்னேற்ற முடியாது.
அழிப்பது மிக சுலபம்.
ஜான் ஆரோக்கியசாமி இந்த அரசை முட்டு சந்திக்கு கொண்டு சென்று விடுவார் போலிருக்கிறது
அதெல்லாம் ஒண்ணுமில்லை. ஜென் zee யின் தேர்வு இந்த ஆட்சி.
அரசாணைகளை மூடி மறைக்க தமிழ்நாடு ஒன்றும் இரும்புத்திரை நாடு சைனா அல்ல. இதையெல்லாம் பார்க்கும் போது முதல்வர் விஜயோ, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளோ தமிழக அரசை இயக்குவது போல் தெரியவில்லை. தவறான ஒரு, சில ஆலோசகர்கள் அரசை இயக்குவதாக சாதாரண பொதுமக்களுக்கு அரசின் மேல் ஓர் சந்தேகம் ஏற்பட்டுள்ளது?மேலும்
-
முதல்வரை விமர்சித்த புகாரில் தேடப்பட்ட வேலுார் தி.மு.க., கவுன்சிலர் விழுப்புரத்தில் கைது
-
வேளாண் கல்லுாரி மாணவிகள் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்
-
சரண்டரான நக்சல் முக்கிய தலைவனுக்கு சிறையில் திருமணம்; போலீஸ் உயரதிகாரிகள் வாழ்த்து
-
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்
-
15 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனையும் அபாயம்
-
விளையாட்டில் சாதனை மாணவர்களுக்கு பாராட்டு