விளையாட்டு பிள்ளையின் பொம்மையாக தவெக கையில் சிக்கிய தமிழகம்: பழனிசாமி காட்டம்

5

சென்னை: முதல்வர் விஜயின் செயல்கள், நகைச்சுவை திரைப்படத்தில் வரும், 23ம் புலிகேசியை நினைவுபடுத்துவதாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.

அவரது அறிக்கை: விளையாட்டு பிள்ளை கையில் சிக்கிய பொம்மை போல், த.வெ.க., கையில், தமிழகம் சிக்கியுள்ளது. காவிரி விவகாரத்தில், 'மைனாரிட்டி' த.வெ.க., அரசின் முதல்வர் விஜய், திணறுவதும் தடுமாறுவதும் வாடிக்கையாகி விட்டது.

தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையே, காவிரி நீர் பிரச்னையை தீர்க்கும், காவிரி தொழில்நுட்ப குழுவின் துணை தலைவர் பதவியில் இருந்த செல்வராஜ், கடந்த ஜூனில் ராஜினாமா செய்தார். அந்த பொறுப்புக்கு புதிதாக யாரையும் நியமிக்காததால், அந்த குழு, கடந்த நான்கு மாதமாக முடங்கி, மேகதாது அணை கட்டும் திட்டத்தை தடுக்க முடியவில்லை. கும்பகர்ணனை கூட துாக்கத்தில் இருந்து எழுப்பி விடலாம். இந்த மைனாரிட்டி அரசின், ஆட்சியாளர்களை தட்டி எழுப்புவது குதிரை கொம்பாக இருக்கிறது.

குடிநீர் பிரச்னை, பாசன பிரச்னையை தீர்ப்பதற்கு பதில், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில், உற்சாகமாக முதல்வர் விஜய் பங்கேற்பது, நகைச்சுவை திரைப்படத்தில் வரும், 23-ம் புலிகேசியை நினைவுபடுத்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement