வரைவு வாக்காளர் பட்டியல் சிவகங்கையில் நவ., 12 ல் வெளியீடு
சிவகங்கை: மாவட்டத்தில் 4 தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நவ., 12 ல் வெளியிட உள்ளதாக சிவகங்கை கலெக்டர் ஆகாஷ் தெரிவித்தார். அவர் கூறியதாவது: வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தம் செய்வதற்காக 1,200 க்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ள ஓட்டுச்சாவடிகளை பிரிக்கவும், பழுதான ஓட்டுச்சாவடி கட்டடங்களுக்கு மாற்றாக ஓட்டுச்சாவடிக்கு புதிய கட்டடங்கள் ஏற்படுத்துதல், வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.
4 சட்டசபை தொகுதிகளில் 1,518 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. 1,200 க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள ஓட்டுச்சாவடிகளை பிரிப்பதின் மூலம் ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை 1,519 ஆக உயர உள்ளன. வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல் நவ., 12 ல் வெளியிடப்படும். வாக்காளர்கள் அனைவரும் இந்த வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு, தங்களது பெயர் இடம் பெற்றுள்ளதை உறுதி செய்ய வேண்டும். விடுபட்ட வாக்காளர், வயது 18 பூர்த்தியான புதிய வாக்காளர்களை சேர்க்க ஓட்டுச்சாவடி அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கு வாக்காளர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார். ///
மேலும்
-
மூன்று நாள் வெயில் நுங்கு விற்பனை அமோகம்
-
அரசு மருந்தகம் பகுதி திறந்த வெளியில் கழிவுநீர்
-
பொன்னானி ஸ்ரீ மகாவிஷ்ணு கோவிலில் புத்தரி பூஜை: கேரளம் நெல் கதிரை சுமந்து வந்த பழங்குடிகள்
-
4 ஆண்டுக்குப் பிறகு அந்தஸ்தை இழந்தார் ஜடேஜா
-
விக்சித் பாரத் இளைஞர் பார்லி., போட்டியில் பங்கேற்க அழைப்பு
-
குழியை மூடி சமன் செய்தால் வாகனம் நிறுத்தலாம்