அரசு மருந்தகம் பகுதி திறந்த வெளியில் கழிவுநீர்
கோத்தகிரி:
கோத்தகிரி பஸ் நிலையம் அரசு மருந்தகம் அருகில், திறந்தவெளியில் கழிவுநீர் செல்வதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
கோத்தகிரி பஸ் நிலையம் அருகில், 'சிவில் சப்ளை' அலுவலகம் உள்ளது. இங்கு, நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள், ரேஷன் பொருட்கள் வாங்கி செல்கின்றனர். சாலையை ஒட்டி, முதல்வர் மருந்தகம் மற்றும் மத்திய அரசின் மலிவு விலை மருந்தகங்கள் உள்ளதால், மருந்து வாங்குவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மேலும், பள்ளி மாணவர்கள் உட்பட, பொதுமக்களின் நடமாட்டமும் இருந்து வருகிறது.
இந்நிலையில், சாலையோர கழிவு நீர் கால்வாய் ' சிலேப்' போட்டு மூடப்படாமல் திறந்த வெளியில் உள்ளது. இதனால், அப்பகுதியில் கட்டடங்களில் இருந்து வெளியேறும் கழிவுகள், வெளியேற வழி இல்லாமல் தேங்கி உள்ளது. இதனால், கொசுத்தொல்லையுடன், துர்நாற்றம் வீசுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
' புகையிலை இல்லா இளைஞர்கள்: ஆரோக்கியமான நீலகிரி ': திட்டத்தை செயல்படுத்த ஒத்துழைப்பு அவசியம்
-
அடுத்தடுத்து நான்கு காட்டு யானைகள் உயிரிழப்பு: நீலகிரி வனவிலங்கு ஆர்வலர்கள் அதிர்ச்சி
-
எஸ்ஐஆர் பணியால் போலி வாக்காளர்கள் நீக்கம்; ராகுல் குற்றச்சாட்டுக்கு கர்நாடகா காங்., அமைச்சர் எதிர்ப்பு
-
8 புதிய நிறுவனங்களுக்கு அனுமதி, சமூக நீதி ஆணையம் அமைக்கப்படும்; தமிழக அமைச்சரவை முடிவு
-
ககன்யான் திட்டத்தின் முதல் ஆளில்லா செயற்கைக்கோள் இந்தாண்டுக்குள் ஏவப்படும்; இஸ்ரோ தலைவர்
-
மக்களின் தேவை அறிந்து அமைச்சர்கள் செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்