4 ஆண்டுக்குப் பிறகு அந்தஸ்தை இழந்தார் ஜடேஜா
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நம்பர் ஒன் ஆல் ரவுண்டர் ஜடேஜா. இவர், டி20 கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த நிலையில், ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். 4 ஆண்டுகளாக டெஸ்ட் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருந்த அவருக்கு தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியை தென்னாப்ரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 31 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு அந்த அணியின் ஆல் ரவுண்டர் மார்கோ ஜான்சென் முக்கிய பங்காற்றினார். அதிரடியாக ஆடி 85 ரன் குவித்தார். பவுலிங்கிலும் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டும், 2வது இன்னிங்சில் 2வது விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினார்.
இதன் மூலம், டெஸ்ட் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ஜடேஜாவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இது அவரது சிறந்த தரநிலையாகும்.
டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசையில் 13 இடங்கள் முன்னேறி 56வது இடத்தையும், டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசையில், 5 இடங்கள் முன்னேறி, ஆஸி.,யின் ஸ்டார்க்கை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.
டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்கா, நியூசிலாந்து, இந்தியா, இங்கிலாந்து அணிகள் முதல் 5 இடங்களில் உள்ளன.
டி20 வீரர்களுக்கான தரவரிசையில், நியூசிலாந்துக்கு எதிராக 35 பந்தில் சதம் அடித்த அபிஷேக் ஷர்மா நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேறியுள்ளார். முதலிடத்தில் இருந்த சக இந்திய வீரர் இஷான் கிஷான் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டார். 2வது இடத்தில் பாகிஸ்தானின் பர்ஹான் உள்ளார். இந்திய டி20 கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயர் 5 இடங்கள் பின்தங்கி 9வது இடத்திலும், திலக் வர்மா 10வது இடத்தில் உள்ளனர்.
டி20 அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா 2வது இடத்திலும், ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் முதலிடத்திலும் உள்ளது.
மேலும்
-
100% எத்தனால் வாகனங்களுக்கு அனுமதி அளித்தால் வினியோகம் எவ்வாறு மேற்கொள்ளப்படும்? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
-
ஏஐ சிப் குறித்த தகவல்: என்விடியா சிஇஓவை உளவுபார்த்த சீனா
-
இஸ்ரேலில் ஆட்சியை தக்கவைக்க பிரதமர் நெதன்யாகு தீவிர முயற்சி
-
'அர்னாப்' புயலால் ஒடிஷாவில் கனமழை: தனித் தீவுகளாக மாறியது 300 கிராமங்கள்
-
ஸ்பெயினில் வெடித்தது போராட்டம்; ரயில் விபத்தைத் தொடர்ந்து அமைச்சர் பதவி விலக மக்கள் வலியுறுத்தல்
-
ஜனநாயகத்துக்கு ஆபத்து; நக்சல் வீடியோ தொடர்பாக நடிகர் நசிருதீன் ஷாவுக்கு மத்திய அமைச்சர் பதிலடி