விக்சித் பாரத் இளைஞர் பார்லி., போட்டியில் பங்கேற்க அழைப்பு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட அளவிலான விக்சித் பாரத் இளைஞர் பார்லிமெண்ட் போட்டிகள் நவ.,10ல் நடக்க உள்ளது.
மத்திய அரசின் இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டுதலில் இளைஞர்கள் இடையே ஜனநாயக, பார்லிமெண்ட் நடைமுறைகள், தலைமைத்துவ பண்புகள், அரசியல் அமைப்பு விழிப்புணர்வை மேம்படுத்த ‘விக்சித் பாரத் இளைஞர் பார்லிமெண்ட்’ நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மை பாரத் கேந்திரா சார்பில் மாவட்ட அளவில் ‘விக்சித் பாரத் இளைஞர் பார்லிமெண்ட்’ போட்டி திண்டுக்கல் காந்திகிராம கிராமிய பல்கலையில் நவ.,10ல் நடக்கிறது.
இப்போட்டியில் 18 – -25 வயது நிரம்பிய கல்லுாரி மாணவர்கள் பங்கேற்கலாம். ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ கருப்பொருள் தொடர்பாக 3 நிமிடங்கள் உரையாற்ற வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் https://forms.gle/UjLLyvekkudst3YC6 என்ற இணைப்பில் வழங்கப்பட்டுள்ள படிவத்தைப் பூர்த்தி செய்து பதிவு செய்ய வேண்டும்.
மாவட்ட போட்டியில் வெற்றி பெறுபவர்கள் மாநில போட்டிக்கு தேர்ச்சி பெறுவர். தேசிய அளவில் விக்சித் பாரத் இளைஞர் பார்லிமெண்டில் பேசுவதற்கான வாய்ப்பு பெறுவர்.
மேலும்
-
குழியை மூடி சமன் செய்தால் வாகனம் நிறுத்தலாம்
-
பூட்டிய வீட்டில் பைப் திருட்டு பொக்காபுரத்தில் இருவர் கைது
-
அச்சுறுத்தும் பாதாள சாக்கடை வாகன ஓட்டுனர்கள் தவிப்பு
-
அச்சுறுத்தும் டிரான்ஸ்பார்மர்
-
தோண்டப்பட்ட ரோடுகள் சீரமைக்காததால் அவதி
-
குழந்தை கடத்தல் வழக்கில் 6 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை; கோவை நீதிமன்றம் தீர்ப்பு