மூன்று நாள் வெயில் நுங்கு விற்பனை அமோகம்

கோத்தகிரி:மூன்று நாட்களாக கோத்தகிரி சுற்றுப்புற பகுதிகளில் வெயிலான காலநிலை நிலவி வருவதால், நுங்கு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில், வடகிழக்கு பருவ மழை புரட்டி எடுத்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக, பகல் நேரத்தில் சுட்டெரிக்கும் வெயிலான காலநிலை நிலவுகிறது. இதனால், சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, கோத்தகிரி -ஊட்டி வழித்தடத்தில், பயணியர் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கனமழை பெய்தாலும், வெப்ப சலனம் உள்ளது.

இந்நிலையில், கோத்தகிரி - ஊட்டி சாலையில், பல இடங்களில் சமவெளி பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட நுங்கு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. ஐந்து நுங்கு மற்றும் ஒரு கப் பதநீர், 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை, சுற்றுலா பயணிகள் உட்பட, உள்ளூர் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

Advertisement