ரேஷன் கடை ஊழியர் மாயம்
பாகூர்: கிருமாம்பாக்கம் அடுத்துள்ள பிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர் வீரமணி 41; புதுச்சேரி கூட்டுறவுத் துறை ரேஷன் கடையில் ஊழியர். இவருக்கு வச்சலா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 17ம் தேதி காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற வீரமணி இது வரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் இல்லை.
ரேஷன் கடையில் ஊழியராக வேலை செய்து வரும் வீரமணிக்கு சரிவர முறையான சம்பளம் வழங்கப்படாமல் இருந்து வருவதால், குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. விரக்தியில் இருந்து வந்த வீரமணி காணாமல் போனது தெரியவந்தது.
இது குறித்து புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து அவரை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு யுஏஇ நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
-
ஆந்திராவின் கடலோரப் பகுதிகளுக்கு நாளை காலை வரை ரெட் அலெர்ட்; மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை
-
ஜம்மு காஷ்மீர் அமைச்சரவையில் ஹிந்துக்கள் பிரதிநிதித்துவம் குறைப்பு
-
புயல் காரணமாக சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் 12 விமானங்கள் ரத்து
-
நகராமல் ஒரே இடத்தில் அர்னாப் புயல்; கரையை கடக்க 3 மணி நேரமாகும் என கணிப்பு
-
அர்னாப் புயல் எதிரொலி; ஆந்திரா, ஒடிசாவில் சூறைக்காற்றுடன் கொட்டியது கனமழை
Advertisement
Advertisement