பொது இடத்தில் ரகளை: 3 பேர் மீது வழக்கு பதிவு

பாகூர்: பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாகூர் போலீசார் நேற்று (அக்.,25) ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, சோரியாங்குப்பம் வி.ஐ.பி., நகர் பகுதியில், ஆபாசமாக பேசி, ரகளையில் ஈடுபட்ட கடலுார் அடூர் அகரம் கிராமத்தை சேர்ந்த குணா 24; மணமேடு பெட்ரோல் பங்க் அருகே ரகளையில் ஈடுபட்ட செல்வாக்குப்பத்தை சேர்ந்த மணிகண்டன் 30; என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல், முள்ளோடையில் ரகளையில் ஈடுபட்ட கரையேற்றிவிட்ட குப்பத்தை சேர்ந்த கார்த்திகேயன் 41 ; என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்

Advertisement