செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம்; நேரில் ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்

10

- நமது நிருபர் -

சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் முக்கிய நீர் ஆதாரமாக திகழும் செம்பரம்பாக்கம் ஏரியை முதல்வர் விஜய் ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், ஏரிக்கு நீர் வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

Tamil News
Tamil News
3,646 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட ஏரியில் தற்போது 1,488 மில்லியன் கன அடி நீர் உள்ளது. 150 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. 208 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

இச்சூழ்நிலையில் ஏரியின் ஐந்து கண், 19 கண் மதகுகள் பகுதியில் ஆய்வு முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொண்டார். நீர் இருப்பு, நீர் வரத்து குறித்த விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அறிவுரை



ஆய்வின் போது, '' செம்பரம்பாக்கம் ஏரியை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும். கட்டுப்பாட்டு அறை முழு எண்ணிக்கை ஊழியர்களுடன் தொடர்ந்து இயங்க வேண்டும். உபரி நீர் திறக்க வேண்டிய கட்டாயத்தில் படிப்படியாக திறப்பதுடன், அதற்கு முன் எச்சரிக்கை விடுப்பது முக்கியம். அடையாறு கரையோர பகுதிகள் பாதிக்காத வகையில் நீர் திறக்க வேண்டும்'', என முதல்வர் விஜய் அறிவுறுத்தினார்.

Advertisement