சாலையோர வாய்க்காலில் கார் கவிழ்ந்து விபத்து
பாகூர்: சென்னை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சரண் 36, மனோஜ் 27, குழந்தை அகானா 4; ஆகியோர் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று இன்று (அக்.,26) காலை எம்.ஜி. பேட்டரி காரில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனர். நாகை - விழுப்புரம் புறவழிச் சாலையில் வந்து கொண்டிருந்த அவர்கள் பாகூர் சந்திப்பில் கிழக்கு பக்கமாக திரும்பி கன்னியக்கோவில் வழியாக சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, அங்குள்ள ஆல்பா கல்லுாரி அருகே சென்றபோது, எதிரே வந்த வாகனத்திற்கு வழி விட ஒதுங்கிய போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருக்கும் சித்தேரி வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த ஒரு குழந்தை உட்பட 5 பேரும் காரில் இருந்து வெளியேறி உயிர் தப்பித்தனர்.
தகவல் அறிந்த பாகூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் பொதுமக்கள் உதவியுடன் கிரேன் மூலமாக காரை மீட்டனர்.
@block_B@
சாலையோரம் உள்ள சித்தேரி வாய்க்காலில் தடுப்பு சுவர் ஏதும் இல்லாததால் இது போன்ற விபத்துக்கள் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது.
எனவே இச்சாலையில் விபத்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.block_B
மேலும்
-
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு யுஏஇ நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
-
ஆந்திராவின் கடலோரப் பகுதிகளுக்கு நாளை காலை வரை ரெட் அலெர்ட்; மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை
-
ஜம்மு காஷ்மீர் அமைச்சரவையில் ஹிந்துக்கள் பிரதிநிதித்துவம் குறைப்பு
-
புயல் காரணமாக சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் 12 விமானங்கள் ரத்து
-
நகராமல் ஒரே இடத்தில் அர்னாப் புயல்; கரையை கடக்க 3 மணி நேரமாகும் என கணிப்பு
-
அர்னாப் புயல் எதிரொலி; ஆந்திரா, ஒடிசாவில் சூறைக்காற்றுடன் கொட்டியது கனமழை