சாலையில் வடிகால் கழிவுகள் ஆவடியில் தொற்று அபாயம்

ஆவடி புதிய ராணுவ சாலை, நேரு பஜார் சாலைகளில் உள்ள மழைநீர் வடிகால்கள் கடந்த வாரம் துார் வாரப்பட்டன. ஆனால், அகற்றப்பட்ட கழிவுகள் மற்றும் கசடுகள், பிளாஸ்டிக் மூட்டைகளில் கட்டி, சாலையோரங்களில் குவித்து வைத்துள்ளனர்.

சமீபமாக பெய்து வரும் மழையால், அப்பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால், சுகாதார சீர்கேட்டுடன் தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, கால்வாய்களில் இருந்து அகற்றப்படும் கழிவுகளை, உடனுக்குடன் அப்புறப்படுத்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

– பார்த்திபன், ஆவடி

Advertisement