தீபாவளிக்கு லஞ்சம் கேட்டால் சொல்லுங்க

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., ராமசந்திரன் கூறியதாவது:

தீபாவளி பண்டிகைக்கு அரசு ஊழியர்கள் லஞ்சமாக பரிசு பொருட்கள், இனிப்பு கேட்டால் கொடுக்க வேண்டாம். மேலும் பணம், பரிசு பொருட்கள் கேட்டால் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கவும். புகார் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள், வியாபாரிகள் பயமின்றி புகார் கொடுக்கலாம்.

டி.எஸ்.பி., 94982 15697, இன்ஸ்பெக்டர் 94981 06118, 83000 36678, அலுவலகம் 04562 252678, வாட்ஸ் ஆப் எண்: 94981 80936 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement