நாகையில் கனமழை மீனவர்களுக்கு தடை
நாகப்பட்டினம்: வங்கக் கடலில் உருவான ஒர்னா புயலையடுத்து, நாகையில் கனமழை பெய்து வருகிறது. மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டு, துறைமுகத்தில் 3 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, புயலாக உருமாறியுள்ளது. ஒர்னா புயலாக பெயரிடப்பட்டு, ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கே 650 கி.மீட்டரில் மையம் கொண்டுள்ளது. நாளை( 28ம் தேதி) விசாகப்பட்டினம் முதல் பாபட்லா இடையில் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நாகை மாவட்டத்தில் பரவலாக கனமழை கொட்டி வருகிறது. கடல் பரப்பில் அலைகள் ஆக்ரோஷத்துடன் கரையை நோக்கி வருகின்றன. மீனவர்களை எச்சரிக்கும் விதமாக, நாகை துறைமுக அலுவலகத்தில், 3 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலில் மீன்பிடிக்க சென்றுள்ள விசைப்படகுகள் பாதுகாப்பாக உடனடியாக கரை திரும்பவும், மறு அறிவிப்பு வரும் வரை, கடலில் மீன்பிடிக்க மீனவர்கள் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும்
-
டிராபிக் போலீசார் 9 பேர் இடமாற்றம்
-
பிரான்சில் இருந்து புதுச்சேரி ரவுடிகளுக்கு பணம் தாதா மணிகண்டன் கடிதம் மூலம் அதிர்ச்சி தகவல்
-
நீதித்துறை ஊழியர்கள் சொத்து விபரம் பதிவேற்றம் தள்ளிவைப்பு
-
சிறுநீர் கழிக்க வேண்டாம் விழிப்புணர்வு பேனரில் கோவில் கோபுர படம்: சர்ச்சையில் மாநகராட்சி
-
வரதட்சணை புகார் சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம் போலீசார் சரியாக விசாரிக்காததால் கோர்ட் உத்தரவு
-
பலாத்காரம் செய்து பெண் கொலை ஆம்புலன்ஸ் டிரைவருக்கு ஆயுள்