நீதித்துறை ஊழியர்கள் சொத்து விபரம் பதிவேற்றம் தள்ளிவைப்பு
சென்னை: நீதித்துறை அலுவலர்கள், ஊழியர்கள், தங்களின் சொத்து மற்றும் கடன் விபரங்களை, இணையதளத்தில் பதிவேற்றுவதை, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தள்ளிவைத்து, சென்னை உயர் நீதிமன்றம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர் நடத்தை விதிகளில் திருத்தம் செய்த, மாநில அரசு, 2025ம் ஆண்டு டிச., 31-ந் தேதி நிலவரப்படி, அரசு ஊழியர்கள் அனைவரும், தங்களிடம் உள்ள சொத்துகள் மற்றும் கடன் விபரங்களை, அக்., 31ம் தேதிக்குள், ஒருங்கிணந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்ட இணையதளம் வாயிலாக, தாக்கல் செய்ய வேண்டும் என, அக்., 5ம் தேதி அரசு உத்தரவிட்டது.
அதன்படி, உயர் நீதிமன்றம், கீழமை நீதிமன்றங்களில் பணிபுரியும், நீதித்துறை ஊழியர்கள், அலுவலர்கள், தங்களின் சொத்து மற்றும் கடன் விபரங்களை, இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, ஒத்திவைக்கப்பட்டு உள்ளது என, சென்னை உயர் நீதிமன்றம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
மேலும்
-
தீபாவளி பலகாரத்தின் தரத்தில் சந்தேகமா? புகார் எண்ணை வெளியிட்ட உணவு பாதுகாப்புத்துறை
-
சக்தி பீட ரயில் யாத்திரை அறிவிப்பு
-
தி.மு.க., ‘மாஜி’ நேரு மீதான ஊழல் வழக்கு ‘டிவி’ நடிகையர் பக்கம் திரும்புகிறது விசாரணை
-
லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்க அறிவுறுத்தல்
-
போலி நகைகளை அடகு வைக்க முயற்சி: கைது 3
-
கல்லுாரி விற்பனை வதந்தி பரப்பிய இருவருக்கு 3 ஆண்டு சிறை உறுதி