விழுப்புரத்தில் இரவில் பெய்த மழை முறிந்து விழுந்த மரம்: மின்சாரம் ‘கட்’
விழுப்புரம்: விழுப்புரத்தில் இரவு நேரத்தில் பெய்த பலத்த மழையால், தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. பழைய அரச மரம் விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. நேற்று (அக்.,25) இரவு 11:00 மணிக்கு தொடங்கிய மழை, இன்று (அக்.,26) காலை 5:00 மணி வரை, விட்டு, விட்டு பரவலாக பெய்தது.
விழுப்புரம் நகரில் இரவு பரவலாக மழை பெய்தது. இதனால், பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், இந்திரா நகர் ரயில்வே பாலம் பகுதிகளில் மழை நீர் தேங்கியது. மோட்டார் மூலம் மழை நீரை அகற்றினர்.
தாமரைகுளம், கனேஷ்நகர், லட்சுமி நகர், முத்தோப்பு உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கி பாதிக்கப்பட்டது. இந்த மழை தாக்கத்தில், இரண்டு மாடுகள் இறந்தன.
மழை காரணமாக, இன்று காலை விழுப்புரம் திரு.வி.க., சாலை, போலீஸ் குடியிருப்பு திரும்பும் சாலையில் இருந்த பழமையான அரசமரம் சாலையில் முறிந்து விழுந்தது. அப்போது, அதன் வழியாக சென்ற உயரழுத்த மின்சார லைன் கட்டானது. இதனால், விழுப்புரம் டவுன் போலீஸ் நிலைய சுற்று பகுதியில் இன்று 2 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. மின்துறையினர் சீர்படுத்தினர்.
மாவட்டத்தில் காலை 8:00 மணி வரை மழையளவு மி.மீ., விபரம்:
விழுப்புரம் 48, வானுார் 45, மரக்காணம் 34, சூரப்பட்டு 25, முண்டியம்பாக்கம் 25, அவலுார்பேட்டை 21, கஞ்சனுார் 18, நேமூர் 16, கெடார் 13, திண்டிவனம் 10, முகையூர் 5. மொத்தம் 324, சராசரி 16 மி.மீ., மழை பதிவானது.
மேலும்
-
மேற்கு ஆசிய பதற்றம்; நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்: பிரிக்ஸ் பார்லிமென்ட் மன்றம் வலியுறுத்தல்
-
5 தொகுதி இடைத்தேர்தல்: ஸ்டாலின் வியூகத்தை முறியடிக்க த.வெ.க., அதிரடி திட்டம்
-
வாகனத்தில் 225 கிலோ குட்கா கடத்திய இருவருக்கு 'காப்பு'
-
வடகிழக்கு பருவமழையையொட்டி தீயணைப்புத்துறையினர் ஒத்திகை
-
மருதுபாண்டியர்களுக்கு குருபூஜை
-
மாணவர்களுக்கு அடையாள அட்டை