ஆன்லைன் பத்திரப்பதிவுக்கு எதிர்ப்பு: ஆவண எழுத்தர்கள் ஆர்ப்பாட்டம்

1

திருமங்கலம்: ‘தமிழகத்தில் ஆன்லைன் மூலம் பத்திர பதிவு நடக்க உள்ளதைக் கண்டித்து, பத்திர நகல் எழுத்தர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பத்திரப்பதிவில் காலதாமதத்தை குறைக்க ‘ஸ்டார் 3.0’ என்ற சாப்ட்வேர் அறிமுகப்படுத்தி, வருகை இல்லா ஆவணப் பதிவு என்ற புதிய நடைமுறையை தமிழக அரசு அறிவித்தது. இதன் மூலம் பதிவு அலுவலகம் செல்லாமல், வீட்டில் இருந்தவாறே ஆன்லைன் மூலம் பத்திரப் பதிவை செய்து கொள்ளலாம் என அறிவித்திருந்தது.

கடந்த புதன்கிழமை ஆன்லைன் பத்திரப்பதிவை அரசு தொடங்கி வைத்தது. மேலும் சென்னையில் 53 தனியார் பத்திரப்பதிவு அலுவலகங்களை திறந்தும் அரசு நடவடிக்கை எடுத்தது. இந்த நடைமுறையை தமிழகம் முழுவதும் விரிவு படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

அரசின் இந்த முடிவால் பத்திர எழுத்தர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். இந்த நடைமுறையில் உள்ள பிரச்னைகளை களைந்து, சுமுக முறையில் பத்திரப்பதிவு நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்திரப் பதிவை ஆன்லைன் முறைக்கு மாற்றியதுடன், பதிவை தனியாருக்கு ஒப்படைப்பதையும் உடனே நிறுத்த வேண்டும். பழைய முறையிலான பத்திரப்பதியை தொடர வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இதற்காக தமிழ்நாடு பத்திர நகல் எழுத்தர்கள் சங்கம் சார்பில் திருமங்கலம் சார் பதிவாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இ்தில் நிர்வாகிகள் சுப்பிரமணியன், கணேசன், ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement