மின் கம்பங்களில் விளம்பர பதாகைகள் – விபத்து அபாயம்
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் விதிமுறைகளை மீறி மின்கம்பங்களில் கட்டப்பட்டுள்ள விளம்பர போர்டுகளால் பராமரிப்பு பணிகளின் போது ஊழியர்களுக்கு தடை ஏற்படுவதுடன் விபத்துக்கு காரணமாகிறது.
ராஜபாளையம் நகர் பகுதியில் உள்ள மின்கம்பங்கள் மின் மாற்றிகளில் மின்வாரிய ஊழியர்கள் துறை சார்ந்த பணியாளர்கள் மட்டும் பராமரிப்புக்காக ஏறி இறங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த மின்கம்பங்களில் சட்ட விரோதமாக விளம்பர தட்டிகள், தனியார் விளம்பர பதாகைகள் கட்டப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் உள்ள மின்கம்பங்களில் இந்த விதி மீறல்களை கட்டுப்படுத்தாததால் விதி மீறல்கள் அதிகரித்துள்ளது. அவசர கால பணியின் போது இது மின் பணியாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதுடன் ஊழியர்களுக்கும் மக்களுக்கும் விபத்து ஏற்பட வழி வகுக்கிறது.
கண்காணிப்பு இல்லாததால் பண்டிகை காலத்தில் அதிகரித்துள்ள நிலையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
மேலும்
-
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு யுஏஇ நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
-
ஆந்திராவின் கடலோரப் பகுதிகளுக்கு நாளை காலை வரை ரெட் அலெர்ட்; மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை
-
ஜம்மு காஷ்மீர் அமைச்சரவையில் ஹிந்துக்கள் பிரதிநிதித்துவம் குறைப்பு
-
புயல் காரணமாக சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் 12 விமானங்கள் ரத்து
-
நகராமல் ஒரே இடத்தில் அர்னாப் புயல்; கரையை கடக்க 3 மணி நேரமாகும் என கணிப்பு
-
அர்னாப் புயல் எதிரொலி; ஆந்திரா, ஒடிசாவில் சூறைக்காற்றுடன் கொட்டியது கனமழை