மாணவியிடம் செயின் பறிப்பு

காரைக்குடி: காரைக்குடி தனியார் கல்லுாரி மாணவி ஒருவர் மூன்றாம் ஆண்டு பயோடெக்னாலஜி படித்து வருகிறார். விடுதியில் தங்கி படித்து வரும் இவர் தோழியுடன் காரைக்குடி அழகப்பா பல்கலை அருகே நடந்து சென்றார். அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் மாணவி அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றார்.

மாணவி காரைக்குடி அழகப்பாபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement